SJB இன் கண்டி மாவட்ட அமைப்பாளராக ஹிதாயத் சத்தார் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக முன்னாள் தெங்கு பயிர்செய்கை சபையின் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான ஹிதாயத் சத்தார் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்இ எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் நேற்று (12) வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
யகலத்தன்னை முஸ்லீம் மகா வித்தியாலயம் மற்றும் கம்பளை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர் London Metropolitan பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டம் MBA (UK), இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் பட்டப்பின்படிப்பு PG Dip in Marketing (SL) மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் டிப்ளோமா Dip in Marketing (SL) என்பனவற்றை நிறைவு செய்தவர் என்பதும் இலங்கை மற்றும் துபாய் UAE நாடுகளில் சந்தைப் படுத்தல் மற்றும் வணிக முகாமையாளராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)