சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு 150 மெற்றிக்த் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு
றிப்தி அலி
புனித ரமழான் மாதத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியாவினால் 150 மெற்றிக்த் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் எச். அல் ஹாரீதி வேண்டிக்கொண்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.
இதற்கமைய இந்த பேரீச்சம் பழங்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ரீதியாக வாழும் முஸ்லிம்களின் சனத்தொகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு உலகமும் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் சவூதி அரேபியாவினால் இலங்கை முஸ்லிம்களுக்கு பேரீச்சம் பழங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் எச். அல் ஹாரீதி மற்றும் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் ஆகியன முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)