அடிப்படைவாதத்துடன் தொடர்புடையோருக்கு வவுனியாவில் புனர்வாழ்வளிப்பு செயற்திட்டம்
அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்த்திட்டம் வவுனியா, பூந்தோட்டம் மீள் ஒன்றிணைத்தில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் புனாவாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த மார்ச் 24ஆம் திகதி புனாவாழ்வு ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிகக் கட்டளை) சட்டத்தின் 27 ஆம பிரிவிற்கான ஒழுங்குவிதிகளின் கீழ் 2021ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பிற்கான (வன்முறையான மட்டுமீறிய மதக் கொள்கையைக் கொணடிருப்பதற்கு எதிரான தீவிரமயமற்ற தாக்குதல்) அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த மார்ச் 12ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவிப்பின் 4ஆவது ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக பாதுகாப்புச் செயலாளரின் அனுமதியுடன் வன்முறையான மட்டுமீறிய மதக் கொள்கையைக் கொண்டிருப்பதற்கு எதிரான தீவிரமயமாக்குதலில் இருநது மீட்பதற்கான புனர்வாழ்வு நிலையமாக பூந்தோட்டம் மீள் ஒன்றிணைத்தில் நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)