கஸீதா தொடர்பான பயிற்சிக் கையேடு தயாரிக்க நடவடிக்கை
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்துடன் இணைந்து மூன்று இல்லாமியக் கலைகளை பாதுகாத்து வளர்ப்பதற்கான பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது.
அந்த வகையில் கஸீதா, பக்கீர் பைத், கோலாட்டம் ஆகிய மூன்று கலைகள் இவ்வருட நிகழ்ச்சித் திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளன. இம்மூன்று கலைகளையும் வீடியோ ஆவணப்படுத்தல், பயிற்சிகளுக்காக பயன்படக்கூடிய கைநூலொன்றை ஒவ்வொரு கலைக்கும் வெவ்வேறாக தயாரித்தல், முறைப்படி பயிற்சிகளை வழங்குதல் என்பன இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கருத்திட்டங்களாகும்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம் அஷ்ரப் மற்றும் கிழக்கு மாகாண கலாச்சாரத் திணைக்களப் பணிப்பாளர் நவநீதன் ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் திட்ட முகாமையாளராக கிழக்கு மாகாண கலாச்சாரத் திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் தெளபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்திட்டத்தின் நெறியாளர்களாக கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ், பேராசிரியர் மெளனகுரு, பிரியதர்ஷினி ஜெதீஸ்வரன், எழுத்தாளர் தமிழ் மாமணி அஷ்ரப் ஷிஹாப்தீன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
கஸீதாவுக்கான கேயேடு எழுதுவது தொடர்பாக இதுவரையில் மூன்று கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன. நூல் எழுவது தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று அட்டாளச்சேனை பிரதேச செயலாளர் ஷாபிர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இக்கலந்துறையாடலில் எழுகவி ஜலீல், கலாச்சார உத்தியோகத்தர் தெளபீக், டாக்டர் முபாரிஸ், சங்கீத ஆசிரியர் நைஸர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
நோக்கம்:
1. அருகி வரும் கலை, பண்பாட்டு அம்சங்களை மீள உயிர்ப்பித்தல்.
2. கஸீதா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
3. கஸீதா பற்றிய கையேட்டு நூலைத் பயிற்றுவித்தலுக்கு ஏற்றவாறு தயாரித்து உதவுதல்.
பணி :
மேற்படி நோக்கங்களை அடையும் பொருட்டு சுமார் 200 பக்க நூலொன்றை / கையேடொன்றைத் தயாரித்தல்.
ஆய்வு முறைகள் :
1. கஸீதா தொடர்பாக இதுவரையில் எழுதப்பட்ட இலங்கையில் கிடைக்கக் கூடிய நூல்கள் மற்றும் கட்டுரைகளை (இணையதளங்கள் உட்பட) ஆய்தல்
2. கஸீதாவில் ஆர்வமும் ஆற்றலும் உள்ள ஆலிம்களை / மௌலவிமார்களையும் இசை வல்லுனர்களையும் ஏனைய துறையினரையும் நேர்காணல் செய்வதன் மூலம் தகவல் திரட்டல்.
3. இதற்கான கள விஜயங்களை மேற்கொண்டு நேரடி அவதானிப்பு மூலம் விடயங்களை ஆராய்தல்.
4. ஆலிம்கள் / மௌலவிமார்கள், பயிற்றுவிப்பாளர்கள் ஒன்றுகூடலொன்றை ஏற்பாடு செய்து கலந்துரையாடல்/ கருத்துப் பகிர்வு மூலம் இதன் நுணுக்கமான விடயதானங்களையும், வேறுபாடுகளையும் புரிந்து கொள்ளல்.
5. வினாக்கொத்து மூலம் தகவல்கள் திரட்டல்.
5. ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு ஊடகங்களிலிருந்து மேலதிக விபரங்களைப் பெறல்.
7. கஸீதா நிகழ்வுகளில் பங்கேற்கும் புதிய தலைமுறை மாணவர்களையும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களையும் சந்தித்தல்.
8. விடய ஆய்வுகளை மேற்கொள்ளல்.
கையேட்டின் உள்ளடக்கம் :
1. கஸீதா பற்றிய விளக்கமும் அறிமுகமும்.
2. கஸீதா பற்றிய சுருக்கமான வரலாற்றுக் குறிப்பு.
3. இலங்கை முஸ்லிம்களிடையே கஸீதா வழக்கிலுக்கிலுள்ள பிரதேசங்களும், அதன் பாரம்பரியம் பற்றிய சுருக்கக் குறிப்புகளும்.
4.பயன்படுத்தப்படும் சொல் வளங்கள், மெட்டுக்கள், தயார்படுத்தப்படும் விதம், உடை மற்றும் இதர அலங்கார வடிவமைப்பு. (புகைப்படங்களை இணைத்தல்)
5.கஸீதாவின் பவனி முறை, தாள மாற்ற முறை வேறுபாடுகள்.
6.கஸீதா பாடும்போது பாடல்களும், அவற்றைப் பாடும் முறையும் சந்தர்ப்பங்களும்.
7.பிரபலமான கஸீதா இயற்றிப் பாடுபவர்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளும் அனுபவப் பகிர்வும்.
8.இந்தியா, பங்களாதேஷ், மலேஷியா, மத்திய கிழக்கு மற்றும் உலகளாவிய கஸீதா தொடர்புகளும், இலங்கை முஸ்லிம்களது தனித்துவங்களும்.
9. அன்றைய கஸீதாக்களுக்கும் இன்றைய கஸீதாக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள்.
10.சமுகத்தில் ஏற்படுத்தியுள்ள (தாக்கம் ) விழிப்புணர்வு.
Comments (0)
Facebook Comments (0)