றிசாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

றிசாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

16 வயது சிறுமியொன்றினை வேலைக் கு அமர்த்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவியுடன் அவரது தந்தை மற்றும் சிறுமியினை கொழும்புக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரல்ல பொலிஸாருடன் இணைந்து பல பொலிஸ் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன.