ஞானசார தேரர் - ரவூப் மௌலவி சந்திப்பு
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரிற்கும் காத்தான்குடியினை தளமாகக் கொண்டு செயற்படும் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் மன்றத்தின் தலைவரான அப்துர் ரவூப் மௌலவியிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (21) வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ராஜகிரியவிலுள்ள ஞானசார தேரரின் விகாரையில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமானவினையும் அப்துர் ரவூப் மௌலவி சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
அப்துர் ரவூப் மௌலவி தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் 30 வருடங்களிற்கு முன்னர் வழங்கப்பட்ட பத்வா தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் ஆகியோரிடம் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான மகஜரொன்று கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமரபுர நிகாயாவின் மகாநாயக்க தேரரையும் அப்துர் ரவூப் மௌலவி சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)