டிரம்ப் உயிர் பிழைத்தமை
ரதீந்திர குருவிட்ட
கடந்த சில தசாப்தங்களாக, குறிப்பாக விக்கிலீக்ஸின் வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, நாட்டிற்குள்ளும் பிற நாடுகளிலும் அரசியல் படுகொலைகளில் அமெரிக்க உளவுத்துறையின் ஈடுபாடு தொடர்பில் உலகம் அதிகமாக கற்றுக்கொண்டது.
அதே நேரத்தில், தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்திய அல்லது தகவலளிப்பாளர்களுடன் பணிபுரிந்த புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் பணிக்கு நன்றி, "சதி கோட்பாடுகள்" என்று நிராகரிக்கப்பட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள் உண்மையில் நடந்தன என்பதை நாங்கள் அறிவோம்.
அரசியல்வாதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சாத்தியமான அரசியல் நோக்கங்களை நிராகரிக்கும் போக்கில் அமெரிக்கா தனித்துவமானதுடன், பெரும்பாலும் லீ ஹார்வி ஓஸ்வால்ட் மற்றும் சிர்ஹான் சிர்ஹான் போன்ற நபர்களை உளரீதியாக நிலையற்ற தனியாக செயற்படுகின்ற நபர்களாக சித்தரிக்கிறது.
சதி கோட்பாடுகளை அரசியல் படுகொலைகளுடன் இணைக்கும் நீண்ட வரலாற்றை அமெரிக்கா கொண்டுள்ளது என்பதில் ஆச்சரியமில்லை. சமீபத்தில் டொனால்ட் டிரம்பின் கொலை முயற்சியும் இந்த முறைமையை பின்பற்றுகிறது. ஈரான் தாக்குதலுக்கு உத்தரவிட்டமை மற்றும் துருவமுனைப்பு அதிகரிப்பு நிகழ்வில் ஒருமித்த கருத்து ஏற்படுவதைத் தடுக்கிறது என்ற கூற்றுகளுடன் இணைந்து அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளின் கடந்தகால நடவடிக்கைகள், அமெரிக்கர்கள் பலர் இந்த படுகொலை முயற்சியை நிழல்அரசின் சதித்திட்டமாகப் பார்ப்பார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
டிரம்ப் கொலை முயற்சியில் இருந்து தப்பினார்
ஜூலை 13 அன்று, பென்சில்வேனியாவின் பட்லரில் ட்ரம்ப் தன் மீதான கொலை முயற்சியில் இருந்து தப்பினார். கொலையாளியான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், டிரம்பை நோக்கி ஐந்து முதல் ஏழு ரவைகளை சுட்டதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காற்றின் வேகத்தை தவறாகக் கணக்கிட்டதால் பல தோட்டாக்கள் அவரது தலையை கடந்து சென்றதுடன் அதில் ஒன்று டிரம்பின் காதை தாக்கியது. சில நிமிடங்களில் குரூக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இரகசிய சேவை முகவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தடுமாறினர். இந்த தாக்குதல் டிரம்ப் தனது பதட்டமற்ற தன்மையையும் அரசியல் உள்ளுணர்வையும் காட்ட அனுமதித்தது. இது ஒருவேளை ஒரு சிறந்த புகைப்படமாக இருக்கும் என்பதை உணர்ந்து, இரகசிய சேவை முகவர்களால் அவசரமாக அப்புறப்படுத்தப்பட முன்பு, டிரம்ப் எழுந்து நின்று, தனது முஷ்டிகளை இறுக்கி, தனது ஆதரவாளர்களை தொடர்ந்து போராடுமாறு வலியுறுத்தினார். அது சிறந்த பேசும்பொருளான ஒளிபரப்பாக இருந்தது.
இரத்தம் தோய்ந்த ட்ரம்பின் புகைப்படங்கள், அவரது உயிரைக் கொல்லும் முயற்சியை வெளிப்படுத்தாமல், வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் விவாதிக்கக்கூடிய வகையில் அவருக்கு ஆதரவான அலையை ஏற்படுத்தியுள்ளன.
மரணத்தால் பதற்றமடையாத ஒரு மனிதன் இந்த நாடு உலகில் எங்கு நிற்கிறது என்பது நிச்சயமற்றதாகவுள்ள ஐக்கிய அமெரிக்காவின் அநேகமாக அதிக எண்ணிக்கையிலான குடிமக்களுடன் பிரதிபலிக்கக்கூடும். சில நாட்களுக்குப் பிறகு குடியரசுக் கட்சி டிரம்ப்பை உத்தியோகபூர்வமாக தங்களது ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது.
வரவிருக்கும் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பைடனுக்குப் பதிலாக மிகவும் கவர்ச்சிகரமான வேட்பாளரக அவருடைய துணை ஜனாதிபதியை கொண்டு வந்திருந்தாலும் கூட, எவ்வாறு வெற்றி பெறுவார்கள் என்பதைப் பார்ப்பது கடினமாகும். ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவது டிரம்பின் பிரச்சினைகளின் ஆரம்பம் மட்டுமேயாகும்.
வளர்ந்து வரும் துருவமுனைப்பு
அமெரிக்கா மிகவும் முனைப்படுத்தப்பட்ட நாடாகும். சமூக ஊடகங்களை மேலோட்டமாகப் பார்த்தால், கணிசமான எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் துப்பாக்கிச் சூட்டை நடாத்தியவர் குறி தவறாமல் இருந்திருந்தால் விரும்பியிருப்பார்கள் என்பதைக் காட்டுகிறது.
ஜனநாயகக் கட்சியின் சில உயரடுக்கினர் ட்ரம்ப் மீதான தாக்குதல் அனுதாபத்தைத் தூண்டுவதற்கும் ரீச்ஸ்டாக் சம்பவத்திற்கு நிகரான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்குமாக திட்டமிடப்பட்டது என்று வாதிடுகின்றனர்.
ஜனநாயகக் கட்சியின் பிரதான நன்கொடையாளரான ரீட் ஹாஃப்மேனின் உயர்மட்ட அரசியல் ஆலோசகரான டிமிட்ரி மெல்ஹார்ன் கூட, டொனால்ட் டிரம்ப் மீதான சமீபத்திய தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்று ஒரு மின்னஞ்சலில் பரிந்துரைத்தார்.
இந்த மின்னஞ்சலானது சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அனுசரணையான ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்டது. ஹாஃப்மேனுடன் இணைந்து "ஐக்கிய அமெரிக்காவில் முதலிடுதல்" என்ற நிதியத்தை நிறுவிய மெல்ஹார்ன், அரசியல் ஆதாயத்தைப் பெற விளாடிமிர் புடின் மற்றும் பிற குழுக்களால் பயன்படுத்தப்பட்ட தந்திரோபாயங்களுடன் இந்த தாக்குதலை ஒப்பிட்டார்.
விடயத்தின் மறுபுறம், "நிழல் அரசு" ட்ரம்பைக் கொல்லத் தயாராக உள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறியாக படுகொலை முயற்சியைப் பார்ப்பவர்கள் உள்ளனர். அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் நாட்டிற்குள்ளும் பிற நாடுகளிலும் அரசியல் படுகொலைகளை நடாத்திய வரலாற்றைக் கொண்டுள்ளன.
கடந்த சில தசாப்தங்களில் அவர்கள் காங்கோ, டொமினிகன் குடியரசு, கியூபா மற்றும் இந்தோனேசியாவில் இத்தகைய தாக்குதல்களையும், சிலியில் சால்வடார் அலெண்டேவுக்கு எதிரான வெற்றிகரமான சதிப்புரட்சியையும் நடாத்தியுள்ளனர்.
FBI இனுடைய Cointelpro கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் அமெரிக்கர்கள் மீதான CIA இன் MKUltra சோதனைகள் போன்ற உள்நாட்டு செயற்பாடுகளும் உள்ளன. பல டிரம்ப் ஆதரவாளர்கள், டிரம்பின் தனிமைப்படுத்தல் போக்குகள் அவரை மற்ற நாடுகளுடனும் உலகளாவிய கொள்கைகளுடனும் மோதலை விரும்பும் நிழல் அரசாங்கத்திற்கு ஒரு தடையாக ஆக்கியுள்ளன என்று நம்புகிறார்கள்.
டிரம்ப் ஆதரவாளர்களும் மற்றவர்களும், டிரம்ப்பைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள ரகசிய சேவையினரின் நடத்தை, கூரையில் துப்பாக்கி ஏந்திய ஒரு நபர் இருப்பதை மக்கள் சுட்டிக்காட்டிய பிறகும் SWAT குழுவினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் மிக அடிப்படையான பாதுகாப்பு நெறிமுறைகளை செயற்படுத்தாமல் புறக்கணித்தமை, பொதுக் கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி பாதிக்கப்படக்கூடிய சூழலை உருவாக்குமாறு பாதுகாப்பு நிறுவனத்தின் உயர்மட்டத்தில் யாரோ ஒருவர் டிரம்பின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தெளிவான நிரூபணமாகினறது என சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்காவின் இரகசிய சேவைகளும் தங்களை நம்பகத்தன்மை குறைந்தவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக இதிலிருந்து வெளியேறியுள்ளன. சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, அந்தச் சம்பவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிகாரிகளுக்கு ஒரு மனித ஆதாரத்திடமிருந்து ஈரான் ட்ரம்பைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத் தகவல்கள் கிடைத்ததாக உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்தன.
இந்த தகவலானது இரகசிய சேவையை முன்னாள் ஜனாதிபதியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க தூண்டியது என CNN செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை ஈரானால் விரைவாக மறுக்கப்பட்டதுடன் கிட்டத்தட்ட யாரும் அதனை நம்பவில்லை.
குறிப்பின்படி, க்ரூக்ஸ் ஓர் ஆரம்ப நிலை துப்பாக்கி சுடும் வீரராவார் என்று மக்கள் எப்போதும் கருதும் ஒருவராக விவரிக்கப்படுகிறார். சில வெளியீடுகள் க்ரூக்ஸ் தனது உயர்நிலைப் பாடசாலை காலப்பகுதிகளில் இடைவிடாமல் கொடுமைப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன.
அவரது முன்னாள் வகுப்புத் தோழர்கள், க்ரூக்ஸை தனிமையில் இருப்பவர் என்று விவரித்ததுடன், அவர் அடிக்கடி அவரது சுகாதாரம் மற்றும் தோற்றத்திற்காக கேலி செய்யப்பட்டார், சிலர் அவரை "ஆரம்ப நிலை துப்பாக்கி சுடும் வீரர்" என்றும் அழைத்தனர். இந்தச் சித்தரிப்பு, அமெரிக்க அரசியல் படுகொலைகளின் வரலாற்றுச் சூழலுடன் இணைந்து, மேலும் சதிக் கோட்பாடுகளுக்குத் தூண்டுகிறது.
அமெரிக்காவிற்கான முக்கியமான சவால்கள்
டொனால்ட் டிரம்பின் மீதான சமீபத்திய முயற்சி, அமெரிக்காவிற்குள் ஏற்கனவே ஏற்பட்டுள்ள ஆழமான முனைவுத்தன்மையை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு எண்ணற்ற சதி கோட்பாடுகளை பற்றவைத்தது மட்டுமல்லாமல், பல அமெரிக்கர்களுக்கு தங்களது அரசாங்கம் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களின் மீது ஆழமான அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஓர் அரங்கேற்றப்பட்ட நிகழ்வு தொடர்பான குற்றச்சாட்டுகள் முதல் நிழல் அரசின் சதித்திட்டத்தின் மீதான நம்பிக்கைகள் வரை மாறுபட்ட எதிர்வினைகள் நாட்டின் அரசியல் பரப்பின் உடைந்த தன்மையை நிரூபிக்கிறது.
ட்ரம்ப் தனது அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்த இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொள்வதால், நாட்டிற்குள் பிளவுகள் ஆழமடையத் தயாராக உள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவிற்கு பெருகிய முறையில் பிளவுபட்ட சமூகத்தில் மாறுபட்ட கண்ணோட்டங்களை சமரசம் செய்வது என்ற ஓர் முக்கியமான சவாலை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன் உயர்மட்ட படுகொலை முயற்சியைச் சுற்றியுள்ள உண்மைகள் கூட போட்டியிடும் கதைகளுக்கான ஒரு போர்க்களமாக மாற முடியும்.
நாடு அடுத்த தேர்தலை நோக்கிச் செல்லும்போது, இந்த தீர்க்கப்படாத பதட்டங்களும் பரவலான அவநம்பிக்கையும் அமெரிக்க ஜனநாயகத்தின் அரசியல் சூழலையும் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கக்கூடும்.
ரதீந்திர குருவிட்ட இலங்கையின் கொழும்பைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளரும் ஆராய்ச்சியாளருமாவார். சிங்கப்பூர் NTU வில் உள்ள எஸ். ராஜரத்தினம் சர்வதேச கற்கை தொடர்பான பாடசாலையில் மூலோபாய ஆய்வுகளில் முதுமாணிப் பட்டம் பெற்றவராவார்.
அவர் அமெரிக்காவிலுள்ள டேனியல் கே. இன்யூயே ஆசியா-பசிபிக் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையத்தில் ஓர் சக ஊழியராகவும், அமெரிக்க வெளியுறவுத் துறையால் நடாத்தப்படும் சர்வதேச பார்வையாளர் தலைமைத்துவ திட்டத்தில் (IVLP) பங்கேற்பாளராகவும் இருந்தார். பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து பல வெளியீடுகளுக்கு எழுதியுள்ள அவர், இலங்கை-சீன உறவுகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)