காற்றாலை திட்டத்திலிருந்து விலகுவதாக அதானி குழுமம் அறிவிப்பு
இலங்கையில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள காற்றாலை மற்றும் இரண்டு மின் பரிமாற்றத் திட்டங்களிலிருந்து விலகுவதாக அதானி குழுமம் இன்று (13) வியாழக்கிழமை அறிவித்தது.
இந்த தீர்மானம் அதானி குழுமத்தின் இயக்குனர் சபையினால் முன்னெடுக்கப்பட்டதாக அதன் பேச்சாள் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், நாங்கள் இலங்கைக்கு அர்ப்பணிப்புடன் உள்ளதோடு இலங்கை அரசாங்கம் விரும்பினால் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக உள்ளோம் எனவும் பேச்சாளர் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)