நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சிவைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வழங்கல்
நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு ஆயுர்வேத திணைக்களத்தினால் அம்பியுலன்ஸொன்று வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் நாவின்னயிலுள்ள ஆயுர்வேத திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஆயுர்வேத ஆணையாளர் சத்துர குமாரதுங்கவினால் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பரிடம் குறித்த அம்பியுலன்ஸ் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் சேவைகளை பாராட்டியும், வைத்தியசாலையின் சேவைகளை மேலும் வினைத்திறனாக்கும் அடிப்படையிலேயே குறித்த அம்புலன்ஸ் ஆயுர்வேத திணைக்களத்தினால் வழங்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் தொற்றா நோய் மற்றும் நீண்ட கால நோய் தடுப்புக்காக நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை கடந்த 3 வருடங்களாக மிகுந்த அர்ப்பணிப்புடன் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் பல்வேறு செயற்பாடுகளையும் இந்த ஆராய்ச்சி வைத்திசாலை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)