பிரித்தானியாவில் கல்வி கற்க இலங்கை மாணவர்களுக்கு அழைப்பு
கொரோனா வைரஸ் காரணமாக அதிக உயிரிழப்புக்களைச் சந்தித்த நாடுகளிலொன்றான பிரித்தானியா படிப்படியாக இயல்புநிலை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், எதிர்வரும் கல்வியாண்டிற்காக இலங்கை மாணவர்களை வரவேற்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிசிறப்பான கல்வித் தராதரத்திற்காக நன்மதிப்புப்பெற்ற உலகின் மிகச்சிறந்த பத்துப் பல்கலைக்கழகங்களில் நான்கு பிரித்தானியாவிலேயே உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 2020/21ஆம் ஆண்டிற்கான பல்கலைகழக அனுமதி மற்றும் கற்றல் முறைகளில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும் சர்வதேச மாணவர்கள் வரும் கல்வியாண்டிற்காக விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தற்போதைய நிலைமைகளின் கீழ் பிரித்தானியாவிற்கு வருகை தருவதில் தாமதங்கள் ஏற்படுமிடத்தும் அதற்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் பல்கலைக்கழகங்கள் நடந்துகொள்ளும் எனவும் பிரித்தானியத்தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 2020/21ஆம் ஆண்டிற்கான பல்கலைகழக அனுமதி மற்றும் கற்றல் முறைகளில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும் சர்வதேச மாணவர்கள் வரும் கல்வியாண்டிற்காக விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தற்போதைய நிலைமைகளின் கீழ் பிரித்தானியாவிற்கு வருகைதருவதில் தாமதங்கள் ஏற்படுமிடத்தும் அதற்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் பல்கலைக்கழகங்கள் நடந்துகொள்ளும் எனவும் பிரித்தானியத்தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020/21 கல்வியாண்டின் நிறைவின் பின்னர் புதிய பட்டப்படிப்பு குடிவரவு விதிமுறைகளின் கீழ் கற்றலின் பின்னர் இரண்டுவருடகாலம் ஐக்கிய இராச்சியத்தில் வேலை அனுபவத்தை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்படும் .
தமது இளமானி மற்றும் முதுமானி பட்டப்படிப்புக்களை வெற்றிகரமாக பூர்த்திசெய்கின்றவர்கள் பிரித்தானியாவில் இரண்டுவருடகாலம் தங்கியிருந்து வேலை செய்வதற்கும் தமது கலாநிதிப்பட்டப்படிப்பை வெற்றிகரமாக பூர்த்திசெய்பவர்கள் மூன்றுவருடகாலம் பிரித்தானியாவில் தங்கியிருந்து பணியாற்ற முடிவும் எனவும் பிரித்தானியத்தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கல்விகற்பதற்கு விண்ணப்பிக்க விரும்பும் சர்வதேச மாணவர்கள் தமது கல்விநடவடிக்கைகள் ஆரம்பமாதற்கு போதிய காலப்பகுதிக்கு முன்பாகவே விஸாவிற்காக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த UK’s Visa Application Centre ன் நடவடிக்கைகள் கடந்த ஜுலை 6ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)