மைத்திரி, அதாஉல்லா உள்ளிட்ட பலருக்கு புதிய அமைச்சரவையில் வாய்ப்பில்லை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலருக்கு புதிய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டனர்.
இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கிய உறுப்பினர்கள் சிலருக்கும், தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியவற்றக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை.
மேலும் பல அரசாங்கங்களின் கீழ், அமைச்சுப் பதவிகளை வகித்த சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பர்களான அநுர பிரியதர்சன யாப்பா, மஹிந்த யாப்பா அபேயவர்த்தன, சுசில் பிரேம்ஜயந்த், டிலான் பெரேரா, ஜோன் செனவிரத்ன, விஜயதாச ராஜபக்ஷ, எஸ்.பி. திசாநாயக்க, சந்திம வீரகொடி, ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றம் மஹிந்த சமரசிங்க ஆகியோருக்கும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை.
தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் மற்றும் கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு ஆகிய பதவிகள் மாத்திரமே தற்போது மீதமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)