கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு ஜப்பான் உதவி
வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்காக HALO Trust க்கு 636,363 அமெரிக்க டொலர்கள் (அண்ணளவாக ரூ. 115 மில்லியன்) தொகையை ஜப்பானிய அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடை தொடர்பான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் HALO Trust இன் நிகழ்ச்சி முகாமையாளர் பெலின்டா வோஸ் ஆகியோர் அண்மையில் கைச்சாத்திட்டனர்.
நாட்டில் நிலவும் கொவிட்-19 தொற்றுப்பரவலுடனான சூழல் காரணமாக, இந்த உடன்படிக்கை இலத்திரனியல் முறையில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு இந்தத் திட்டம் உதவியாக அமைந்திருக்கும்.
கண்ணிவெடி காணப்படும் பகுதிகளை பாதுகாப்பான பகுதிகளாக்கி, இடம்பெயர்ந்து வாழும் மக்களை தமது சொந்தப் பகுதிகளில் மீளக்குடியேற்றி, அதனூடாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த 5,000க்கும் அதிகமானவர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் மேம்படுத்த உதவியாக அமைந்திருக்கும்.
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்காக 2002ஆம் ஆண்டு முதல் நன்கொடை வழங்குவதில் ஜப்பான் முன்னோடியாகத் திகழ்கின்றது.
இலங்கையில் இயங்கும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நான்கு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஜப்பான் உதவிகளை வழங்குகின்றது.
Grant Assistance For Grassroots Human Security Project (GGP) திட்டத்தினூடாக 37.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை உதவியாக வழங்கப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டில் இலங்கையில் தனது செயற்பாடுகளை ர்யுடுழு ஆரம்பித்திருந்ததுடன், நாட்டில் கண்ணிவெடிகள் காணப்பட்ட 35Km2 காணியை விடுவித்துள்ளது.
ஜப்பானின் உதவியில் இந்த நடவடிக்கையின் 20 சதவீதத்துக்கு அதிகமான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன. எதிர்வரும் சில வருடங்களில் கண்ணிவெடி தாக்கமாற்ற நாடாக இலங்கையைத் திகழச் செய்யும் நோக்கில் இலங்கை அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.
இந்தத் திட்டத்தினூடாக, ஜப்பான் அரசாங்கம் தனது பங்களிப்பை வழங்குவதுடன், நாட்டை சகலருக்கும் பாதுகாப்பானதாக திகழச் செய்துள்ளது.
இந்த நன்கொடை பெற்றுக்கொண்டமை தொடர்பில் HALO Trust இன் நிகழ்ச்சி முகாமையாளர் பெலின்டா வோஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
'ஜப்பான் தொடர்ச்சியாக வழங்கி வரும் பங்களிப்புக்கு HALO Trust என்றும் நன்றியுடன் திகழும். உலகளாவிய ரீதியில், யுத்தம் இடம்பெற்ற நாடுகளில் மனிதநேய உதவிகளை பெற்றுக் கொடுப்பதில் ஜப்பான் பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்டுள்ளது.
இலங்கை இதற்கு சிறந்த ஆதாராமாக அமைந்துள்ளது. இலங்கையில் தற்போது நான்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு ஜப்பான் தற்போது உதவிகளை வழங்குகின்றது, HALO Trust க்கு ஜப்பானிய உதவி என்பதனூடாக, 9.12Km2 இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் போது புதைக்கப்பட்டிருந்த 94,000 க்கும் அதிகமான கண்ணிவெடிகள் மற்றும் இதர வெடி பொருட்கள் இதன் போது அகற்றப்பட்டுள்ளன. யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் நூற்றுக் கணக்கான இருபாலாரையும் பணிக்கமர்த்தி இதை எய்த முடிந்துள்ளது.
அவர்களுக்கும் வருமானமீட்டுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. யுத்தகால ஆயுதங்களிலிருந்து காணிப்பகுதிகள் விடுவிக்கப்பட்டதும், வசிப்பதற்கு அல்லது பண்ணைச் செய்கைகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பானதாக அமைந்திருக்கும்.
அதனூடாக பொருளாதார வளர்ச்சியையும் எய்தக்கூடியதாக இருக்கும். இதுவரையில் HALO வின் ஜப்பானிய நிதி உதவியில் இடம்பெறும் கண்ணிவெடி அகற்றல் அணிகளினால் 200,000 க்கும் அதிகமான மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாட்டினூடாக இலங்கை அரசாங்கத்தின் இலக்கை எய்துவதற்கும் ஜப்பான் உதவிகளை வழங்குகின்றது.' என்றார்.
Comments (0)
Facebook Comments (0)