கை கழுவுதல் தொடர்பில் 23,037 பேருக்கு ஆசிய சொலிடாரிடட் வலையமைப்பினால் விழிப்புணர்வு
கை கழுவுதல் மற்றும் சுத்தமும் சுகாதாரம் பேணுதல் தொடர்பில் 23,037 பேருக்கு விழிப்புணர்வூட்டல் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிய சொலிடாரிடட் வலையமைப்பு தெரிவித்தது.
மாத்தளை, மொனராகலை நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மூன்றாவது ஆண்டாக நடைமுறைபடுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் 41 சதவீதமான ஆண்களுக்கும் 59 சதவீதமான பெண்களுக்கும் இந்த விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி உலகளாவிய கை கழுவும் நாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ஆசிய சொலிடாரிடட் வலையமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் நியூகிளியஸ் பவுன்டேசன் நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்போடு ஆசிய சொலிடாரிடட் வலையமைப்பால் இந்த செயற்த்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதுவரை 'உள்வாங்கப்படாத மக்களை சென்றடைவதற்கான திட்டத்திற்கு 2020 வருடத்தில் கொண்டாடப்படவிருக்கும் உலகளாவிய கை கழுவும் நாள் தனித்துவமானதும் விசேடமானதுமான நாளாக அமையப் போகிறது.
இலங்கையில் இந்த திட்டம் கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதன் மூலம் உயிர்காக்கும் ஒரு திட்டமாக மாறியிருக்கிறமை குறிப்பிடத்தக்கது. உண்மையில் இந்த உள்வாங்கப்படதாத மக்களை சென்றடைவதற்கான திட்டம் இலங்கையின் மத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் வாழும் பாடசாலை மாணவர்கள், சமூகம் என்பவற்றில் 'கழுவுதல்' (நீர், சுகாதராம் மற்றும் சுத்தம்) பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய மிகவும் பொருத்தமான, தாக்கமுள்ள காலத்துக்குகந்த முறையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றாகும்.
திட்டத்தின் குறிக்கோளை அடைவதற்காக திட்டமிடப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளில் முக்கியமான ஒன்று பெருந்தோட்டங்களிலும் அதனை சூழவுள்ள கிராம சமூகங்கள் மத்தியிலும் பாதுகாப்பான சுகாதராரம் மற்றும் நீரை பயன்படுத்துதல் தொடர்பான பழக்க வழக்கங்கள் மற்றும் சமூக நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொடர்பாடல் நடவடிக்கைகளாகும்.
மேற்குறிப்பிட்ட பங்காளர் நிறுவனங்களால் இந்த முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த திட்டத்தின் முதல் இரண்டு வருடங்களில் சமூக நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொடர்பாடல் நடவடிக்கைக்கு அதாவது 'முறையான கைகழுவுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை இலகுபடுத்தி நடைமுறைப்படுத்துவதற்காக உள்ளுர் செயல்பாட்டாளர்களான பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார மருத்துவமாது ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இரண்டாம் வருட முடிவில் 'உள்வாங்கப்படாத மக்களை சென்றடைவதற்கான' இந்த திட்டம், திட்டத்தின் கீழ் வரும் சமூகங்களின் மத்தியில் ஆழமான நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கை கவுழுவுதல் ஒரு புதிய அறிவாக இல்லாவிட்டாலும், கொவிட் 19 வைரஸ் தாக்கம் ஏற்பட்டு சவர்காரம் கொண்டு கை கழுவுதல் என்ற விடயம் வலியுறுத்தப்படும் வரையில் கை கழுவுதல் பெரிதாக முக்கியத்தும் பெறாமல் இருந்த நிலையில் முறையான கை கழுவுதல் மேம்பாடான சுகாதார வெளியீடுகளை பெற உதவியுள்ளது.
இந்த பின்னணியில் எதிர்காலத்தில் உலகளாவிய ரீதியிலான தொற்று நோய்களை தடுக்க வேண்டுமானால்; பொது சுகாதாரத்தை மேம்படுத்தி நிலைநிறுத்தி வைப்பதற்கு, நாம் நீர், சுகாதாரம், சுத்தம் என்பவற்றை தவிர்க்க முடியாத அடிப்படை அம்சங்களாக கொண்டு ஆரம்பிக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.
உள்வாங்கப்படாத மக்களை சென்றடைவதற்கான திட்டத்தின் ஒட்டுமொத்த குறிக்கோள் வொஸ் திட்ட முன்னெடுப்புகள் மூலம் ஓரங்கட்டப்பட்ட, பின்தங்கிய, சேவைகளை குறைவாக பெறும் மக்களின் சுகாதார மற்றும் போஷாக்கு நிலையை மேம்படுத்துவதாகும்.
இந்த பின்னணியில் திட்டத்தின் பயனாளிகள் தனிநபர் சுகாதாரம், முறையான கைகழுவுதல் என்பவற்றை நடைமுறைபடுத்துவதில் முன்னனியில் இருப்பதால் ஆசிய சொலிடாரிடட் வலையப்பு அதன் பங்காளர் நிறுவனங்களுக்கு 2020 ஆண்டு உலகளாவிய கை கழுவுதல் தினம் தனித்துவமானதும், விசேடமானதுமான தினமாக ஆகியிருக்கிறது.
'உள்வாங்கப்படாத மக்களை சென்றடைவதற்கான திட்டம்' ஐரோப்பிய யுனியனினால் நிதியுதவியளிக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட கிரா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைமுறைபடுத்தப்படுகிறது.
'உள்வாங்கப்படாத மக்களை சென்றடைவதற்கான திட்டம்' அதன் மூன்றாவது வருடத்தை வெற்றிகரமாக நடைமுறைபடுத்தி வருவதோடு அது பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள், தோட்டங்கள், சூழவுள்ள கிராமங்கள் ஆகியவற்றில் தற்போதுள்ள கிராமிய நீர் வழங்கள் முறைமைகளை மேம்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பானதும், போதுமானதுமான நீர்வசதிகளை செய்து கொடுக்கும்.
நீர் வழங்கள் முறைமைகள் மாகாண சபைகள், கல்வி அமைச்சு, சுதாதரா அமைச்சு, உள்ளுராட்சி ஆணையாளர் ஆகிய அமைப்புகளோடு இணைந்து மேம்படுத்தப்படுகின்றன.
இந்த திட்டம் முடிவடையும் போது ஆசிய சொலிடாரிடட் வலையப்பு பெருந்தோட்டங்கள், கிராமங்களில் காணப்படும் 100 அல்லது அதற்கு மேம்பட்ட நீர் வழங்கள் முறைமைகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுவரை தெளிவூட்டலில் 'உள்வாங்கப்படாத மக்களை சென்றடைவதற்கான திட்டம்' நடைமுறைப்படுத்தப்பட்டு உயிர்காக்கும் செயல்முறையாக மாற்றமடைந்திருக்கும் கை சுத்தம் பற்றிய திட்டம் இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கொவிட் - 19 வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த உதவியிருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)