வைத்தியசாலைகளைப் பாதுகாக்க நிப்போனிடமிருந்து 3-In-1 MediFresh
வர்ணப்பூச்சில் புத்தாக்கம் மிக்க முன்னணியாளராகத் திகழும் நிபோன் பெயிண்ட், நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர்களிடமிருந்து பாதுகாப்பை வழங்கும் தனது சமீபத்திய தயாரிப்பான 3-In-1 MediFresh மூலம் இலங்கை முழுவதிலும் உள்ள சுகாதார வசதிகளை கல்வனேற்றப்படுத்தும் முயற்சியொன்றை அண்மையில் ஆரம்பித்திருந்தது.
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதுடன் முதற்கட்டமாக கொழும்பு தொற்று நோய் வைத்தியசாலையில் (ஐடிஎச்) இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டின் பிரதான நகரங்களுக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது. இந்த உற்பத்தியானது நோய்களை உருவாக்கும் வைரஸ்களிலிருந்து பாதுகாப்பு வழங்குகிறது என்பது சிங்கப்பூரில் பிரபல்யமான இரு ஆய்வுகூடங்களான Productivity & Standards Board (PSB) மற்றும் TÜV SÜD PSB ஆகியவற்றில் நடத்தப்பட் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு கிடைத்த சாதகமான பின்விளைவைத் தொடர்ந்து முகம்மூடியணிதல் மற்றும் தடுப்பூசி வழங்குதலுக்குப் பின்னால் 'மூன்றாவது அடுக்கின் பாதுகாப்பை' பெயின்ட் இரண்டிப்பாக்கியுள்ளது.
இந்த உற்பத்தி மற்றும் இலங்கையில் இதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த நிபோன் லங்கா பெயிண்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் நிமந்த அபேசிங்ஹ குறிப்பிடுகையில்,
"வர்ண்ணப்பூச்சின் ஒப்பனை மற்றும் அழகியல் செயல்பாடுகளுக்கு அப்பால் ஒரு தனித்துவமான தயாரிப்பை அறிமுகப்படுத்திய உலகளவில் முதல் பெயின்ட் உற்பத்தியாளர்களில் ஒருவராக இருப்பதில் நாம் பெருமை அடைகிறோம்.
3-In-1 MediFresh பயன்படுத்த எளிதானதாகவும், தற்போதுள்ள வண்ணப்பூச்சு அடுக்கை அகற்றாமல் பரந்த அளவிலான பரப்புகளில் பயன்படுத்த முடியும் என்பதாலும் செலவு மற்றும் உழைப்பு என்பற்றிலும் சிக்கனமாக உள்ளது. இது போன்ற காரணங்களால் உள்ளூர் சந்தையில் இதற்கு சாதகமான வரவேற்பு உள்ளது.
சுகாதார வசதிகள், பாடசாலைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், வீடுகள் போன்றவற்றுக்கு பரிந்துரைக்கக் கூடிய உற்பத்தியாக இது காணப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கிடைக்கக்கூடிய ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் நோய்த் தொற்று விகிதத்தைக் குறைப்பதற்கு உதவும் என நாம் நம்புகின்றோம். அவர்களின் பாதுகாப்பே எமக்கு முதன்மையானது" எனக் குறிப்பிட்டார்.
3-In-1 MediFresh இன் உள்துறை பயன்பாட்டிற்கான அக்ரிலிக் எலாஸ்டோமெரிக் பூச்சு MRSA, E-COLI மற்றும் Staphylococcusaureus போன்ற பல வகையான பாக்டீரியாக்களிலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், அஸ்துமா, காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவற்றைத் தடுக்கிறது.
இந்த உற்பத்தியானது நீர்புகாத் தன்மையைக் கொண்டதாகவும், சிறிய விரிசல்களைத் தடுக்கும் வகையிலும் அமைந்திருப்பதுடன், நாடு முழுவதிலும் உள்ள விற்பனை முகவர்களிடம் இதனைக் கொள்வனவு செய்ய முடியும்.
Comments (0)
Facebook Comments (0)