சம்பள நிலுவைகளுடன் மீள சேவையில் இணைக்கப்பட்டார் டாக்டர் ஷாபி
சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் டாக்டர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் சேர்க்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன் சம்பள நிலுவையை வழங்குவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிஹாப்தீன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றியதோடு, பெண்களின் அனுமதியின்றி கருத்தடை செய்ததாக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் குருநாகல் பிரதான நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டார். டொக்டர் மொஹமட் ஷாபி ஷிஹாப்தீன், தாய்மார்களின் கருமுட்டைக் குழாய்களை (Fallopian Tube) அடைத்ததாகவோ, சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவோ, அல்லது அவர்களுடன் தொடர்புகளைப் பேணியதாகவோ இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நிரூபிக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) 2019 ஜூலை மாதம் குருநாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
Comments (0)
Facebook Comments (0)