கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விக்கு ஆதரவளிக்கும் KOICA
கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (KOICA) யுனிசெப் ஊடாக KOICA நிதி உதவியுடன் புதிய பள்ளிகளை வட மாகாணத்தில் உள்ள கல்வி அதிகாரிகளிடமும் கிளிநொச்சி சமூகத்திடமும் ஒப்படைத்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் யுனிசெப் ஊடாக KOICA இன் நிதி உதவியுடன் கூடிய கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாடசாலைகள் மற்றும் மாணவர்களுக்கான உதவிகள் தற்கால இக்கட்டான காலங்களில் முன்னெடுப்பது மிக முக்கியமான விடயமாகும்.
தற்போது சிறுவர்களின் பாடசாலை வருகை மற்றும் தொடர்ச்சியான கற்றல் பெரிதும் சிரமமாக உள்ளது. குறிப்பாக நிதி நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் இடையே கற்றல் இழப்பை காணக்கூடியதாக உள்ளது. கொவிட் 19 தொற்று நோய்களின் போது காணப்பட்ட ஏற்றத்தாழ்வு மேலும் இதனை வலுப்படுத்துகின்றது.
இலங்கையிலுள்ள சிறுவர்களின் தொடர்ச்சியான கல்வி கற்றல் செயற்பாடுகளை உறுதி செய்து, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அதன் செல்வாக்கு செலுத்தும் மறைமுகமான ஆபத்துகளை தடுக்க யுனிசெப் ஆனது KOICA ஊடாக கிளிநொச்சி மற்றும் வட மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலும் கல்வியை மேம்படுத்துவதற்கு தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சு மற்றும் வட மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் 2018 தொடக்கம் 2022 வரையான காலப்பகுதிக்கான செயற்திட்டத்தில் இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகளுக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்கி உள்ளது.
அத்தோடு சிறப்பு தேவை உள்ள பள்ளிகளை சேர்ந்த 5,051 மாணவர்களுக்கும் மேம்பட்ட கல்வி சூழலை பெற உதவி செய்துள்ளது. மேலும் 13 பாடசாலைகள் மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஆசிரியர்கள் கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கல்வி முக்கியத்துவம் குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் வட மாகாணத்தின் அவசரகால கல்வி தேவைக்கு KOICA ஆதரவு வழங்கி உள்ளது. மிகவும் பின்தங்கிய இரண்டு லட்சம் குழந்தைகளின் தொடர்ச்சியான உறுதி செய்வதற்காக கல்வி உபகரணங்களின் பற்றாக்குறையை தடுக்க புதிய பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான காகிதங்கள் மற்றும் குறிப்பேடுகளை வழங்க தீர்மானித்துள்ளது. கல்வி உபகரணங்கள் தேவைப்படும் குழந்தைகளுக்கு தடையின்றி கல்வி வழங்க யூனிசெப் எப்போதும் ஆதரவுடன் இருக்கும்.
"இந்த சவாலான நேரத்தில் சிறுவர் மற்றும் சிறுமிகள் தொடர்ந்து கல்வி செயற்பாடுகளை தொடர்வதற்கு உதவுவதன் மூலம் இலங்கையின் குழந்தைகளுக்கு அவர்களின் ஒற்றுமையும் ஆதரவையும் வெளிப்படுத்தியமைக்காக நாம் KOICA நிறுவனத்திற்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.
நாடு முழுவதும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில பகுதிகளில் உள்ள குழந்தைகள் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியின் காரணமாக பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் இது போன்ற முயற்சிகள் இவர்களின் கற்றல் மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புக்களை வழங்க உதவுகிறது என யுனிசெப் பிரதிநிதி எம்மா ப்ரிகம் தெரிவித்தார்.
பல மாதங்களாக கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் அதை தொடர்ந்து நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் யுனிசெப் ஊடாக வழங்கும், தரமான கல்வியை உறுதி செய்தல் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவித்தல் என்பன இலங்கை, நிலையான அபிவிருத்தி இலக்கை அடைய முக்கிய பங்களிப்பாக உள்ளது.
Comments (0)
Facebook Comments (0)