மீனவர் பிரச்சினையினை மனிதாபிமாக கையாள வேண்டும்: இந்திய உயர் ஸ்தானிகர்
றிப்தி அலி
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையினை மனிதாபிமான முறையிலேயே கையாள வேண்டியுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
இதன் ஊடாகவே இப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண முடியும். இந்த விடயம் தொடர்பில் இரு நாடுகளினதும் துறைசார் நிபுணர்கள் விரிவான பேச்சு நடத்த வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
"இரண்டு நாடுகளினாலும் கைது செய்யப்படும் மீனவர்கள் நல்ல முறையிலேயே கவனிக்கப்படுகின்றனர். இரு நாடுகளிலும் உள்ள ஏழை மீனவர்களுக்கு இது வாழ்வாதாரப் பிரச்சினையாகும். இதனால் குறித்த விடயத்தினை மிகவும் நுணுக்கமாக கையாள வேண்டியுள்ளது" என உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரிற்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (20) கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. இதன்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
Comments (0)
Facebook Comments (0)