9 மாகாண வைத்தியசாலைகள் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ்
நாட்டிலுள்ள 9 மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டிய, அவிசாவளை, கம்பஹா, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட ஆதார வைத்தியசாலைகளே மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.
இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்று (14) திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)