MPக்களின் கல்வித் தகமையை வெளிப்படுத்த பாராளுமன்றம் மறுப்பு
எஸ். ரூபதிசன்
பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமைகள் பற்றிய விபரங்களை வெளியிட முடியாது என பாராளுமன்றம் அறிவித்துள்ளது.
அவர்களின் கல்வித் தகைமையினை வெளியிடுவது பாராளுமன்ற உறுப்பினர்களின் 'அந்தரங்க உரிமையை பாதிக்கும்' எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமைகளை அறிந்துகொள்ள சன்டே டைம்ஸ் முயற்சித்திருந்தது.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமையானது அவர்களின் அந்தரங்க உரிமை எனவும், இது பொது விவகாரம் கிடையாது எனவும் பாராளுமன்றின் உதவி செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு கல்வித் தகமை ஓர் அடிப்படை கிடையாது எனவும் வாக்காளராக இருந்தால் மட்டும் போதுமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)