அளுத்கம கலவரம்: ஞானசார தேரருக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு சிபாரிசு

அளுத்கம கலவரம்: ஞானசார தேரருக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு சிபாரிசு

கடந்த 2014ஆம் ஆண்டு அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யுமாறு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினாலேயே இந்த சிபாரிசு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அண்மையில் கையளிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் திகதி அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலினால் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் 80 காயமடைந்ததுடன் பல கோடி ரூபாய்க்கள் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

"எனினும் குறித்த சிபாரிசு தொடர்பில் தனக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை" என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

நன்றி - த மொர்னிங்