பொதுஜன பெரமுனவின ஊடாக அரசியலில் குதிக்கிறார் அம்ஹர் மௌலவி

பொதுஜன பெரமுனவின ஊடாக அரசியலில் குதிக்கிறார் அம்ஹர் மௌலவி

கடந்த ஈஸ்டர் தற்கொலை தாக்குதலின் பின்னரான காலப் பகுதியில் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரபயல்யம் பெற்ற நீர்கொழும்பினைச் சேர்ந்த அம்ஹர் மௌலவி அரசியலில் குதிக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கமைய ஏப்ரல் இறுதியில் நடைபெறும் எதிர்பார்க்கப்படும் பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளார்.

அம்ஹர் மௌலவியின் சொந்த மாவட்டமான கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் இந்த தேர்தலில் களமிறங்கவுள்ளார்.

இது தொடர்பிலான முக்கிய சந்திப்பொன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட தலைவரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவின் இல்லத்தில் முக்கிய பேச்சுவார்த்தையொன்றும் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மல்வானையினைச் சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான இஸ்மாயில் ஹாஜியார் விசேட குரல் பதிவொன்றினை அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.