எங்க போய் முடியப்போகுதோ...
முஜீப் இப்றாஹீம்
அரசாங்கம் இன்று இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடொன்றை கொண்டுவந்துள்ளது.
அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் அவசர தேவையற்ற பொருட்களின் இறக்குமதிக்கு 100% பொருட்களின் பெறுமதிக்பான Letter of Credit (LC) திறக்கப்பட வேண்டும் என்ற அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அத்தியவசியம் அற்ற அல்லது அவசரத்தேவை இல்லாத பொருட்களின் பட்டியலை வாசித்தால் 1845 ஆம் ஆண்டு காலத்தை நோக்கி பின் நகர்ந்தாலும் இதில் அத்தியவசிய பொருட்களாகவும் அவசரத்திற்கு தேவையான பொருட்களாகவுமே வரும்.
இந்த நடைமுறையால் விளையப்போவது 20 ரூபா விற்கும் பெண்கள் கொண்டைக்கு குத்துகிற க்ளிப் 200 ரூபாவாக ஆக வாய்ப்புகள் உள்ளன.
வாகன இறக்குமதி தடைக்கு முன்னர் 34 லட்சம் விற்ற Stingray ரக வாகனங்கள் இப்போது 80 லட்சங்களை தாண்டி இருக்கிறதல்லவா? அது போல இந்த பட்டியலில் உள்ள பொருட்களின் விலைகள் எல்லாம் எகிறும்!
நேரடியாக இறக்குமதி தடை என்று சொல்வதை விட இவ்வாறான கடினமான நிபந்தனை ஒன்றை விதித்து விட்டால் ஒரு சில வேண்டப்பட்ட பெரு வியாபார முதலைகள் மாத்திரம் குறித்த பொருட்களை இறக்குவார்கள்.
அவர்கள் விரும்பிய விலைகளுக்கு விற்பார்கள்.
கற்பம் தரித்த வேளையில் சில complications தோன்றும் போது கற்பப்பையில் முடிச்சு ஒன்றை போட்டு குழந்தை பெறும்வரை pre matured birth ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பார்கள்.
நமது தேசத்தில் பொருளாதாரம் அதள பாதாளத்தில் கிடக்கிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான பொருளாதார வியூகங்கள் தெரியாமல் தடுமாறுகிறார்கள்.
கற்பப்பை முடிச்சு போல பண வீக்கத்தை காப்பாற்றுகிறோம் என்ற கோதாவில் தொடர்ந்தும் ஒவ்வொரு முடிச்சுகளாக போட்டுப்பார்க்கிறார்கள். அந்த முடிச்சுகளை முறையாக சரியாக போட வேண்டிய இடங்களில் போடத்தெரியவில்லை.
Comments (0)
Facebook Comments (0)