20ஆவது திருத்த வரைபு; முக்கிய விடயங்கள்
✍️ புதிய பாராளுமன்றம் நியமிக்கப்பட்டு ஓராண்டிற்குப் பின்னர் ஜனாதிபதியினால் எந்த சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும்.
✍️ எத்தனை அமைச்சர்களையும் நியமிப்பதற்கு அரசாங்கத்திற்கு முடியும்.
✍️ ஜனாதிபதி எந்த அமைச்சையும் தன் வசம் வைத்திருக்க முடியும்
✍️ சுயாதீன ஆணைக்குழுக்களின் அங்கத்தவர்கள், தலைவர்களை நேரடியாக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம்.
✍️ ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கான குறைந்த வயதெல்லை 30ஆக குறைப்பு.
✍️ உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நியமனங்களை ஜனாதிபதியினால் வழங்க முடியும்.
✍️ நீதிச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதி வழங்கப்பட்டுள்ளது.
✍️ ஜனாதிபதி, காலத்திற்கு காலம், பிரகடனத்தின் மூலம நாடாளுமன்றத்தைக் கூடுமாறு அழைப்பு விடுக்கலாம், அமர்வை நிறுத்தவும், நாடாளுமன்றத்தை கலைக்கவும் அதிகாரம் உண்டு
✍️ 10 பேரைக் கொண்ட அரசியல் அமைப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை. (பேரவையில் 5 அங்கத்தவர்கள் மாத்திரமே)
✍️ பாராளுமன்ற பேரவையில் சிவில் சமூக பிரதிநிதிகள் இல்லை.
✍️ பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
✍️ இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியும்.
Comments (0)
Facebook Comments (0)