மகப்பேற்று மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறையின் தாக்கம்
இலங்கையில் 15 வயதிலிருந்து நான்கில் ஒரு (24.9%) பெண்கள் வாழ்க்கைத் துணை அல்லது வாழ்க்கைத் துணை அல்லாதவரால் உடல் மற்றும் அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளனர் என 2019ஆம் ஆண்டு பெண்கள் நல்வாழ்வு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
நெருக்கமான வாழ்க்கைத் துணை வன்முறை என்பது இந்த வன்முறைகளின் மிகவும் பொதுவான வடிவமாகும், இது உலகளவில் மில்லியன் கணக்கான பெண்களை பாதிக்கிறது.
கொவிட்-19 முடக்கம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள், பெண்களின் உயிர் காக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளுக்கான அணுகலை சீர்குலைத்துள்ளன, பால்நிலை சார் வன்முறை (GBV) மேலும் அதிகரித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இந்த சேவைகள் மிகவும் தேவைப்படும் நேரத்தில், பால்நிலை சார் வன்முறைக்கு பதிலளிக்கும் அதிகாரிகளின் திறனையும் தொற்றுநோய் தடுத்துள்ளது. வீட்டு வன்முறை அதிகரித்து வருவதால், தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறிப்பாக ஆபத்தில் உள்ளது.
வாழ்க்கைத் துணையின் உடல், பாலியல் அல்லது உளவியல் ரீதியான தீங்கு மகப்பேற்று மற்றும் இனப்பெருக்க சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகும், இது பிரசவத்தின் போதான தாய் மரணங்களுக்கு கூட வழிவகுக்கும். உதாரணமாக, நெருக்கமான வாழ்க்கைத் துணை வன்முறையால் (IPV) பாதிக்கப்படும் பெண்கள் கருத்தடையை குறைவாகப் பயன்படுத்துவார்கள் அல்லது கருத்தடை பயன்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அல்லது கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் இருக்காது, இது திட்டமிடப்படாத கர்ப்பத்திற்கு வழிவகுக்கும்.
உடல் ரீதியான பாதிப்பு வேதனை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அப்பால், மனநல விளைவுகள் கணிசமானவை மற்றும் கவலை மற்றும் மன அதிர்ச்சி, மன அழுத்தம் என்பன தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதிக்கும் என்பதுடன், பல எதிர்மறை மகப்பேற்று சுகாதார விளைவுகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிக்கலாம்.
இந்த இடைத்தொடர்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் சனத்தொகை தொகை நிதியமானது (UNFPA) மீண்டும் இலங்கை மருத்துவ சங்கத்துடன் (SLMA) இணைந்து 'மகப்பேற்று மற்றும் குழந்தை சுகாதாரத்தில் பால்நிலை சார் வன்முறையின் தாக்கம்' பற்றிய ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது.
பிறப்பு குறைபாடுகள் பற்றிய 9வது சர்வதேச மாநாட்டின் நிறைவு அமர்வின் போது தொடங்கப்பட்ட உரையாடல் மற்றும் முந்தைய SLMA அமர்வில் 'புதிய இயல்பில் அனைவருக்கும் விரிவான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குவதற்கான உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறை' மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கு இடையிலான தொடர்புகள், கொவிட் -19 சூழலில் தாய் மரணங்கள் மற்றும் பிரசவத்தினால் ஏற்படும் நோய்நிலைகள், குழந்தை ஆரோக்கியம், பிறப்பு குறைபாடுகள் மற்றும் உடல் குறைபாடுகள் என்பவற்றை ஆராய்ந்தது.
"பால்நிலை சார் வன்முறை மற்றும் தாய் மற்றும் குழந்தை மரணம் மற்றும் நோயுற்ற தன்மை ஆகியவற்றுக்கு இடையே காணப்படும் தொடர்புகளுக்கான ஆதாரங்களின் அடிப்படையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் உயிர்வாழ்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் பால்நிலை சார் வன்முறை என்பது அவசர முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும்" என UNFPA இலங்கையின் பொறுப்பதிகாரி; திருமதி ஷhரிகா குரே கூறினார்.
இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், SLMAயின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன, "பால்நிலை சார் வன்முறை பல எதிர்மறையான மகப்பேற்று சுகாதார விளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதில் மோசமானது தாய் மரணங்கள்.
இலங்கையில் பொதுவாக இது ஒரு பிரச்சினையாக பல கொள்கை வகுப்பாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், திருமணமான மற்றும் திருமணமாகாத தம்பதியினரிடையே மிகவும் நெருக்கமான வாழ்க்கைத் துணை வன்முறை காணப்படுகின்றது.
எனவே, 4,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களைக் கொண்ட இலங்கையின் மிகப் பழமையான தேசிய மருத்துவ நிபுணர் சங்கம் என்ற முறையில், எந்தவொரு உறவுக்கும் உள்ளேயும் வெளியேயும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பது எமது கடமை என்று நான் கருதுகிறேன்" எனத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் பூட்டான் அலுவலகத்தின் இடைக்கால தலைமை அதிகாரி திருமதி மது திஸாநாயக்கவினால் நெறியாள்கை செய்யப்பட இந்த கலந்துரையாடலில் களனி மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளர் செல்வி நிலுகா குணவர்தன, டி சொய்சா பெண்கள் மருத்துவமனையின் பெண்ணோயியல் வைத்தியரான வைத்தியர் ஹர்ஷாஅதபத்து மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஆசிய பசுபிக் வளையத்திற்கான பாலின ஆலோசகர் உபாலா தேவி ஆகியோர் பங்குபற்றினர்.
கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த நிபுணர் குழுவைச் சேர்ந்த திருமதி நிலுக்கா குணவர்தன, "விசேட தேவையுடைய பிள்ளைகளின் தாய்மார், நிலவும் தாயை குறைகூறும் அல்லது பழிச்சொல்லும் கலாச்சாரத்தினால், அநேகமான நேரங்களில் களங்கம் மற்றும் வன்முறைக்குள்ளாகின்றனர் (வெளிப்படையாக மற்றும் மறைமுகமாக).
களங்கத்தை இல்லாதொழித்து தெளிவுபடுத்தல்களை வழங்குவதன் மூலம் தாய்மாரின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் மிகவும் அவசியமானதாகும்" என்றார்.
இந்த குழு கலந்துரையாடல் நைரோபி உச்சிமாநாட்டின் உணர்வின் அடிப்படையில் அமைந்திருந்ததுடன், அனைவருக்கும் உரிமைகள் மற்றும் தெரிவுகள் அனைவருக்குமானது என்பது, 2030 நிலையான அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படை பகுதியாகும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
Comments (0)
Facebook Comments (0)