சுற்றாடல் மாநாட்டில் பங்கேற்க பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஜேர்மனி பயணம்

சுற்றாடல் மாநாட்டில் பங்கேற்க பள்ளிவாசல்துறை  முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஜேர்மனி பயணம்

சர்வதேச சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கற்பிட்டி பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.யூ.எம்.உம்மு பரீதா, ஜேர்மனி  நோக்கி பயணமாகியுள்ளார்.

ஜேர்மனி Von Berlin நிறுவனத்தால் அண்மையில் நடத்தப்பட்ட Germany Von Berlin சுற்றாடல் (plastics technic) தொடர்பான ஆய்வில் கற்பிட்டி கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் தேசிய ரீதியாக முதலாம்  இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இதனை கௌரவிக்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை (26) ஜேர்மனியில் இடம்பெறும் சர்வதேச சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபருக்கு கிடைத்துள்ளது.

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள சர்வதேச சுற்றாடல் மாநாட்டில், குறித்த அதிபருக்கு விஷேட உரையாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக புத்தளம் வலய சுற்றாடல் ஆணையாளர் பாருக் பதீன் தெரிவித்தார்.

ஜேர்மனி Von Berlin நிறுவனத்தால் அண்மையில் நடத்தப்பட்ட Germany Von Berlin சுற்றாடல் (plastics technic) தொடர்பான ஆய்வில் போட்டியில் பள்ளிவாசல்துறை மு.ம.வித்தியாலயம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெறுவதற்கு அதிபரோடு இணைந்து அயராது முயற்சித்த புத்தளம் சுற்றாடல்  முன்னோடி ஆலோசகர் ஏ.எச்.எம்.எம்.ஷாபி, கற்பிட்டி கோட்ட ஆணையாளர்  எச்.சுஹைப் உட்பட ஏனைய கோட்ட மட்ட ஆணையாளர்கள், பபள்ளிவாசல்துறை மி.ம.வி. ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.