வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் சேவைக்கு இணையவழி நியமனங்களை பெறுமாறு அறிவிப்பு
வெளிநாட்டு அமைச்சினால் வழங்கப்படும் கொன்சியூலர் சேவைகளை வினைத்திறனாக பெற்றுக்கொள்வதற்கு இணையவழி நியமனங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு சேவைநாடுநர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"பல்வேறு சான்றிதழ்கள் / ஆவணங்களை சான்றுறுதிப்படுத்திக் கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது அதிக எண்ணிக்கையிலான சேவை நாடுநர்கள் வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருகின்றனர்.
அதிகாரிகளின் முழுமையான திறனைப் பயன்படுத்தி கொன்சியூலர் விவகாரப் பிரிவு சேவைகளை வழங்கி வருவதுடன், மின்னணு ஆவணங்கள் சான்றளிப்பு முறைமை (ஈ-டாஸ்) மூலம் சான்றிதழ்கள் / ஆவணங்கள் முழுமையான திறனில் சான்றுறுதிப்படுத்தப்படுகின்றன.
சான்றுறுதிப்படுத்தல் நோக்கங்களுக்காக வேலை நாட்களில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருமாறு சேவை நாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காகவும், பிரிவில் பொது மக்கள் ஒன்று கூடுவதை இலகுவாக்குவதற்காகவும், விண்ணப்பதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் நேரத்தை ஒதுக்கி தமக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுகின்ற வகையில் http://consular.mfa.gov.lk/ONLINEBOOKING என்ற இணைப்பின் மூலம் இணையவழி நியமனங்களைப் பெற்றுக்கொவதற்கு சேவை நாடுநர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.
மாத்தறை, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய அலுவலகங்களுக்குச் சென்று கொன்சியூலர் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சேவை நாடுநர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். தொடர்பு விவரங்கள் பின்வருமாறு:
மாத்தறை
அனகாரிக தர்மபால மாவத்தை,
பம்புரான, மாத்தறை,
தொலைபேசி: 041 2226697,
மின்னஞ்சல்: matara.consular@mfa.gov.lk
யாழ்ப்பாணம்
யாழ் மாவட்ட செயலகம்,
தொலைபேசி: 021 2215972,
மின்னஞ்சல்: jaffna.consular@mfa.gov.lk
கண்டி
மஹிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப நிலையம், கெட்டம்பே,
தொலைபேசி: 081 2384410,
மின்னஞ்சல்: kandy.consular@mfa.gov.lk
குருநாகல்
சிறுவர்கள் மற்றும் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களம்,
தம்புள்ளை வீதி,
தொலைபேசி: 037 2225931,
மின்னஞ்சல்: kurunegala.consular@mfa.gov.lk
திருகோணமலை
தலைமைச் செயலாளர் அலுவலகம்,
தொலைபேசி: 026 2223186,
மின்னஞ்சல்: trincomalee.consular@mfa.gov.lk
பல்வேறு விதமான கொன்சியூலர் சேவைகளுக்கான மேலதிக விவரங்களுக்காக, கொன்சியூலர் விவகாரப் பிரிவைத் பின்வரும் வகையில் தொடர்பு கொள்ளலாம்:
சான்றிதழ்கள் / ஆவணங்களைச் சான்றுறுதிப்படுத்துவதற்கான அங்கீகாரப் பிரிவு: தொலைபேசி: 2338812 / 7711194, மின்னஞ்சல்: authentication.consular@mfa.gov.lk
வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்களின் பிரிவு: 2338836 / 3136715
வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்களின் இழப்பீடு தொடர்பான பிரிவு: 2437635 / 7101193
சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்புதல் தொடர்பான பிரிவு: 2338837
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகாரங்கள் தொடர்பான பிரிவு: 2338847
இதர சேவைகள்: 2338843
ஏனைய பிரிவு: 2335942
Comments (0)
Facebook Comments (0)