கிழக்கை முன்மாதிரியான மாகாணமாக மாற்றியமைப்பதே நோக்கமாகும்: ஆளுநர்
கிழக்கு மாகாணத்தை ஏனைய மாகாணங்களை விடவும் ஒரு முன்மாதிரியான மாகாணமாக மாற்றியமைப்பதே எனது நோக்கமாகும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
இந்த மாகாணத்தினை செழிப்பான மாகாணமாக்கும் திட்டம் தொடர்பில் அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நேர்காணல் – பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாணத்தின் தூரநோக்கு பற்றி குறிப்பிட முடியுமா?
கிழக்கு மாகாணத்தின் சூழலியல் அமைப்பினது ஏந்து திறனை தாங்கிச் செல்வதுடன் உள்ளூர் சமூதாயத்தினது விருப்பின்படி பொருளாதார சுழற்சி மிக்க சுபீட்சமானதொரு மாகாணத்தினை விருத்தி செய்து சுற்றுச்சூழல் பொறுப்புடைத் தன்மையின் வாயிலாக சமூதாய முன்னேற்ற பொருளாதார சுபீட்சத்தின் விருத்திக்கான சுதேச அபிவிருத்தி மாதிரிகளை உள்வாங்கிய அபிவிருத்தியை நோக்கிய மாகாணமாக்குவே ஆகும்.
கிழக்கு மாகாணத்தின் சுபீட்சத்தின் நோக்கு என்ன?
எமது இல்லம், எமது சுவாசத்திற்கான காற்று, வாழ்வதற்கும் குடிப்பதற்கும் நீர், உணவு, பயிரிட மண், எமது சுற்றாடலை ஒழுங்குபடுத்த வனம் போன்றவற்றை தருகின்ற கிழக்கு மாகாணத்தை எதிர்கால சந்ததியினருக்கான சுபீட்சத்தை உறுதிப்படுத்தும் அனைத்து செயற்பாடுகளிலும் எமது சுற்றாடலை பாதுகாத்து வழங்குவதாகும்.
எமது நாடு பரந்துபட்டதும், தனித்துவமான இயற்கைச் சுற்றாடலினால் பெறுமதிமிக்க இயற்கை வளங்களின் செழிப்பானதொரு பொருளாதாரத்திற்கான நிலைபேறான வகையில் அதை வழங்க இயன்றவாறு காணப்படுகின்றன.
அவற்றின் வாயிலாக சுபீட்சத்திற்கான இயற்கைச் சுற்றாடலை உறுதிப்படுத்தி செயலாற்றல் மிக்க உயிரியற் சுழற்சி முறைப் பொருளாதாரமொன்றை விருத்தி செய்து உலகம் பின்பற்றக் கூடியதொரு அபிவிருத்தியை செயற்படுத்துவதற்கு இயற்கை வளங்களை பயன்படுத்தி பெற்றுக்கொள்வதாகும்.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் சுபீட்சத்தின் நோக்கு என்ற கொள்கையின் இலக்குளை அடையாளங் கண்டுகொள்வதற்காக அனைத்துத் துறைகளையும் இணைத்து நிலைபேறான வாழ்வியற் சுழற்சி வழியாக மக்களின் நலனை உறுதிப்படுத்தி இயற்கைச் சுற்றாடலை வளப்படுத்தி அனைத்துச் செயற்பாடுகளிலும் பூரணத்துவமான இலக்குகளை அடைவதாகும்.
கிழக்கு மாகாணத்தில் நிலைபேறான அபிவிருத்தியை செயற்படுத்துவதற்கு எவ்வாறான வழிமுறைகளை கையாள்வீர்கள்?
வாழ்வியல் பாதுகாப்பு, வாழும் இடத்தினை மீள் அமைத்தல், சுற்றுச்சூழல், நட்பு முறையிலமைந்த போக்குவரத்து வலையமைப்பு, சுற்றுச்சூழல் நட்புமுறைக் கட்டுமானங்கள், கழிவு முகாமைத்துவம், தொல்பொருளியல், சுற்றுலாத்துறை, நீர்ப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, விதைகள், மீன்பிடி, கால்நடை, இறைச்சி, முட்டை, பால் உணவு, சக்திப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, ஆளுகை போன்ற வழிமுறைகள் மூலம் நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வோம்.
நீங்கள் மேற்குறிப்பிட்ட வழிமுறைகள் மூலம் எவ்வாறான அபிவிருத்தியை அடைந்துகொள்வீர்கள்?
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்திலும் சுற்றாடல் பாதுகாக்கப்பட்டே மேற்கொள்ளப்படுகின்றது. எமது அரசின் கொள்கைக்கு அமைவாக எமது நாட்டில் அருகிவரும் சுற்றாடல் அமைப்பை மீட்டெடுத்து புனர்நிர்மானம் செய்து சுற்றாடலைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் முன்னெடுத்து பொருளாதார ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதாகும்.
விவசாயம், சுகாதார பராமரிப்பு, சுற்றுலாத்துறை, கல்வி மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்த வகையில் விவசாய சூழலியல் கைத்தொழில் அணுகுமுறையினூடான சுழற்சிமுறைப் பொருளாதார நிலையை ஈட்டிக்கொள்வதற்காக முறையான திட்டத்தை வகுத்து அதனடிப்படையில் முன்னெடுக்கப்படும்.
இதற்காக எனது அலுவலக அதிகாரிகள் முறையான திட்டமிடலை செயற்படுத்தி வருகின்றனர். அதாவது, மக்களின் நலன்கள், சுகாதாரம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றுடன் உள்ளூர் நிர்வாக கட்டமைப்புடன் ஒருங்கிணைந்து செயற்படவுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் கழிவு முகாமைத்துவத்தில் நேர்த்தியான கழிவு முகாமைத்துவ முறைமையை ஆரம்பித்து அந்தக் கழிவுகள் கிராம, நகர மற்றும் மாநகர மட்டத்தில் திரட்டி அதை மாகாண மட்டத்தில் மீள் நோக்கத்திற்கு உட்படுத்தி சேதனப் பசளை, உருவாக்கத்திற்கும், சக்தி உற்பத்திக்கும், மீள் பாவனைக்கான மீள் சுழற்சி மற்றும் மீள் உருவாக்கம் என்பவற்றிற்காக அவற்றை பயன்படுத்துதலாகும்.
மீன்பிடித்துறைசார் தயாரிப்பதற்கான தேவைகளை ஆய்வு செய்து உள்ளூர் நீர் நிலைகளை பாதுகாத்து அதை வளப்படுத்துகின்ற அதேவேளை கரையோர நீர் நிலைகளில் பாரம்பரிய மற்றும் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்பிடி வழங்களை விரிவாக்கம் செய்வதாகும்.
சுதேச, அலோபதி மற்றும் பூரண சுகாதார பராமரிப்பு வழங்குநர் மற்றும் உற்பத்தியாளர்களை பதிவு செய்து அவர்களை ஒருங்கிணைப்பதற்கு ஒரு புதிய முறைமை ஒன்றை மாகாணத்தில் அறிமுகப்படுத்தி அனைத்து சுகாதார சேவை வழங்கும் நிலையங்களை வினைத்திறன் மிக்க ஒருங்கிணைப்புக்கும், முகாமைத்துவத்திற்கும் உள்வாங்கி செயற்படுத்துதலாகும்.
தேசிய சுதேச வைத்திய சங்கம், இலங்கை ஆயுர்வேத வைத்திய சங்கம் போன்றவற்றின் முன்னாய்வுகளை மேற்கொள்ளும் கோரிக்கையை முன்வைத்து அனைத்து நிபுணர்கள், கிழக்கு மாகாணத்தில் தேவைப்படும் மூலப்பொருட்கள் சம்பந்மான பொதுத்தரவுத்தளம் ஒன்றை ஸ்தாபித்து மருத்துவ தேவைகளுக்காகவும், சர்வதேசத்தில் நிலவும் மூலிகை அழகு சாதனப் பொருட்களுக்கான கேள்வியை ஈடு செய்யத்தக்க வகையிலும், மூலிகைகளை வீட்டுத் தோட்டங்களில் இருந்து பெறத்தக்கதாக உள்ளூர் மக்கள் மத்திய சபைகள் ஊடாக தகவல்களை வழங்குதல்.
சுகாதார அமைச்சு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆயுர்வேத, சித்த, யுனானி, ஏனைய சுதேச பாரம்பரிய வைத்தியம், ஹோமியோபதி போன்ற வைத்திய முறைகளை சுற்றுலாத்துறையின் கேள்விக்கும், உள்ளூர் தேவைப்பாடுகளை ஈடு செய்யத்தக்க வகையில் பொறிமுறையொன்றினை அறிமுகப்படுத்தி வைத்தல்.
முன்பள்ளி முதல் மூன்றாம் நிலைக் கல்வி வரையில் தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட செயற்பாட்டுத்திட்டம் ஒன்றினை வடிவமைத்து அத்திட்டத்தை அமுல்படுத்துவதே எமது குறிக்கோளாகும். கிராமியப் பாடசாலைகளில் இழக்கப்பட்ட தரங்களை மேம்படுத்ததுவதற்கும், அத்தகைய பாடசாலைகள் மூடப்படுவதிலிருந்து தடுப்பதற்கும், உட்கட்டமான வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதற்கும், மிகவும் பின்தங்கிய கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் புதிய முறை ஒன்றினை உருவாக்குதல் போன்ற பல திட்டங்களை உள்வாங்கி கிழக்கு மாகாணத்தை எல்லா மாகாணங்களை விடவும் ஒரு எடுத்துக்காட்டான மாகாணமாக மாற்றியமைப்பதே எனது நோக்கமாகும்.
Comments (0)
Facebook Comments (0)