சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை திறப்பு

சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த  வைத்தியசாலை திறப்பு

நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்

மறைந்த டாக்டர் ஏ.எல்.எம். ஜெமீலினால் ஆரம்பிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் முதல் தனியார் வைத்தியசாலையான டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரண்டாவது வைத்தியசாலையான சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை இன்று (11) வெள்ளிக்கிழமை

அந்நிறுவன முதல்வர் டாக்டர் றிஷான் ஜெமீலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர். எம். தொளபீக் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த திறப்பு விழா நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், சாய்ந்தமருது வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிரில், வைத்திய அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்னர் செவிலியராக ஆரம்பித்து, 10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்த இந்த தனியார் வைத்தியசாலை தற்போது புதுப்பிக்கப்பட்டு சேனலிங் சேவைகள், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள், கண் மருத்துவ அறுவை சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சைகள், எலும்பியல், சிறுநீரகம், மகளிர் மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சைகள் போன்ற 35க்கும் மேற்பட்ட சிறப்புகளுடன் செயற்படுகின்றது.