அரச ஊடக நிறுவன பதவிகளில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்பு!
- ஏ.எச்.எம். பூமுதீன் -
அரசாங்க ஊடக நிறுவனங்களுக்கு - புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊடக அமைச்சர் - பந்துல குணவர்தன , மேற்படி நியமனங்களை நேற்று (13) திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.
இந்த நியமனங்களில் - முஸ்லிம் தரப்பு முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையிலும் கல்வித்துறையிலும் எத்தனையோ தகுதியான சிரேஷ்டத்துவம் கொண்டவர்களும் கல்வியியலாளர்களும் முஸ்லிம் சமுகத்துக்குள் இருக்கத்தக்கதாக இந்த புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளமை - திட்டமிட்ட சதியாகவே முஸ்லிம் சமுகத்தினரால் பார்க்கப்படுகின்றது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை பொறுத்த வரை - முஸ்லிம் சேவையில் - ஐவேளை அதான் ஒலிபரப்புக்கு பெருந்தொகை பணத்தை வழங்கி அனுசரனை வழங்கப்படுகின்றது.
ஆனால் - சிங்கள சேவையில் - அவர்களது பௌத்த மத நிகழ்ச்சிகளை அனுசரனை இன்றியே நடத்திச் செல்கின்றனமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோல் - அரச ஊடக நிறுவனங்கள் அனைத்திலும் கடமையாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களும், கட்டுப்பாட்டாளர்களும், அறிவிப்பாளர்களும் - பெருந்தொகையான முஸ்லிம் அனுசரனையாளர்களை நெருங்கி நிகழ்ச்சிகளுக்கு அனுசரனை பெற்றுக் கொடுத்து வருகின்றனர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - இன்று ஓரளவு நஷ்டமின்றி செயற்படுவதற்கு பிரதான காரணம் - முஸ்லிம் சேவையில் இடம்பெறும் அனுசரனைகளே என தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.
ஆனால் , இந்த தகவல் திட்டமிட்டு மூடி மறைக்கப்படுவது வேறு விடயமாகும். இன்று - இந்த அரசாங்கத்தின் கெபினட் அமைச்சர் #ஹாபீஸ் நஸீர் அஹமட். அதுபோல் எம்பீக்களான காதர் மஸ்தான், அலி சப்ரி, எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் அலி சப்ரி றஹீம் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடன் தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
அரச ஊடக நிறுவன பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளோர் கீழே உள்ளது:
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
தலைவர் : அசங்க பிரியநாத் ஜயசூரிய
பணிப்பாளர் சபை:
• பேராசிரியர் திரு. சமிந்த ரத்னாயக
• பேராசிரியர் திரு. டி.எம். அஜித் திசாநாயக்க
• சட்டத்தரணி திரு. ரகித அபேகுணவர்தன
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு
தலைவர் : கணக்காளர் திரு. கணக அமரசிங்க
பணிப்பாளர் சபை:
• சட்டத்தரணி திரு. லலித் பியும் பெரேரா
• விரிவுரையாளர் திருமதி. மஹேஸ்வரி மஹிமதாஸ்
• திரு. ரவிந்திர குருகே
• திரு. இந்திக லியனஹேவகே
• திரு. ஹசந்த ஹெட்டியாராச்சி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
தலைவர் : திரு. ஹட்சன் சமரசிங்க
பணிப்பாளர் சபை:
• பேராசிரியர் வண. மாகம்மன பஞ்ஞானந்த தேரர்
• திரு. பிரியந்த கே. ரத்னாயக
• திரு. ஜே. யோகராஜ்
• திரு. எம்.சிசிர குமார
Comments (0)
Facebook Comments (0)