கல்முனை பிராந்தியத்திற்கும் கொவிட் தடுப்பூசிகளை வழங்குமாறு சாணக்கியன் பாராளுமன்றத்தில் கோரிக்கை
கல்முனை சுகாதார பிராந்தியத்திற்கு தேவையான கொவிட் - 19 தடுப்பூசிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று (08) கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய சுகாதார பிரிவுகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் கல்முனை பிராந்தியத்திற்கு மாத்திரம் வழங்கப்படவில்லை என அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
இதனால் குறிப்பிட்ட பிரதேச மக்களுக்கும் கொவிட் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு நான் பேசுவதை இங்குள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இனவாத அடிப்படையில் பேசுவார் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.
இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான கொவிட் செயலணியில் முன்வைப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதற்கு சபையில் பதிலளித்தார். அத்துடன், நோய் அதிகமாக பரவும் பிரதேசங்கள் இனங்காணப்பட்டே இந்த தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை இடம்பெறுவதாக அவர் மேலும் கூறினார்.
Comments (0)
Facebook Comments (0)