யூத தாயகத்தின் புவிசார் அரசியல்
வினோத் முனசிங்க
பலஸ்தீனத்தின் வரலாறு சர்ச்சைகள் நிறைந்தது. அது மதத்தால் மறைக்கப்பட்டது. குடியேற்றம் மற்றும் கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாத்திற்கும் மதம் மாறுதல் ஆகிய அம்சங்கள் யூதர்களின் சனத்தொகை குறைவுக்கு வழிவகுத்தன.
1516ஆம் ஆண்டளவில் ஓட்டோமான் வெற்றியையடுத்து யூதர்கள் 2% சனத்தொகையைக் கொண்டிருந்தனர். இதேநேரம் முஸ்லிம்கள் 85% வீதமாகவும் கிறிஸ்தவர்கள் 11% வீதமாகவும் இருந்தனர்.
சவர்க்காரம், சைத்தூண் எண்ணெய், சீனி, பார்லி, பருத்தி முதலியவற்றையும், மேலும் 1840ஆம் ஆண்டுகளில் இருந்து, தனது சின்னமான ஜாஃபா தோடம் பழங்களையும் ஏற்றுமதி செய்து ஒட்டோமான் பாலஸ்தீனம் செழிப்பும் வளர்ச்சியும் அடைந்தது. எனினும், பிரித்தானியரின் விஷேட செல்வாக்கினால் புவிசார் அரசியல் மாகாணத்தை பாதிக்க தொடங்கியது.
"சிறந்த விளையாட்டு"
குலிஸ்தான் (1813), துர்க்மென்செய் (1828) மற்றும் அட்ரியானோபில் (1829) ஆகிய உடன்படிக்கைகள் ரஷ்யாவிற்கு காகசஸ் அந்தஸ்தை வழங்கின. மேலும் 1833ஆம் ஆண்டு அன்கியார் ஸ்கெலெசி உடன்படிக்கை பாஸ்போரஸ் மற்றும் டார்டனெல்லஸ் ஊடாக செல்வழி உரிமையை அளித்தன.
"ரஷ்ய தூதர், சுல்தானின் தலைமை அமைச்சரவை அமைச்சராகிறார்" என்று முன்னாள் பிரித்தானிய வெளியுறவு செயலாளரான லார்ட் பால்மர்ஸ்டன் விஷனம் தெரிவிக்கின்றார்.
இந்தியாவுக்கான வழிக்கட்டுப்பாட்டை மற்றைய சக்திகள் பெறுவது பற்றி அச்சமடைந்த, பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் (FO) ரஷ்யா துருக்கியையும் மற்றும் ஈரானையும் கைப்பற்றியதை இட்டு கவலைப்படத் தொடங்கியது.
மேலும் "கிரேட் கேம்" எனும் அரசியல் இராஜதந்திர போர் மூலம் பதிலளித்தது. 1830ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பிராங்கோ-எகிப்திய கூட்டணியைத் தொடர்ந்து, FO எகிப்தைப் பற்றியும் கவலைப்பட்டது.
இதன் வழியாக தீபகற்ப மற்றும் ஓரியண்ட் (P - O) நிரல் பிரித்தானியாவுக்கும் இந்தியாவிற்கும் இடையே அஞ்சல் சேவையையும் பயணிகள் சேவைகளையும் 1840ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. எகிப்துக்கு அடுத்ததாக பாலஸ்தீனம் பிரித்தானியரின் பார்வையில் பெரிதாகத் தொடங்கியது.
பால்மர்ஸ்டன் ரஷ்யாவிற்கு எதிராக ஒட்டோமான் அரசை பலவீனப்படுத்தவதற்கான முட்டுக்கட்டையை போடும் நோக்கத்துடன் ஒரு கொள்கையை வகுத்தார்.
எகிப்திய பாஷா மெஹ்மத் அலியை சிரியாவுக்கும் துர்கிக்கும் திருப்பி அனுப்பும்படி சுல்தான் அப்துல்மெஜித் I கட்டாயப்படுத்தியதால் அவரது சீர்திருத்தங்களிலும், கட்டாய நடவடிக்கைகளிலும் காத்திரமாக உதவினார்.
பிரித்தானியாவின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு, பிராந்தியம் முழுவதும் தூதரகப் பணிகளின் வலையமைப்பை அமைக்கவும் அவர் முடிவு செய்தார். அதன்படி, அவர் 1838ஆம் ஆண்டில் ஜெருசலேமில் துணைத் தூதரகத்தை நிறுவி, வில்லியம் டேனர் யங்கை தூதராக நியமித்தார்.
"ஒவ்வொரு சாதாரண ஊக்கமும்"
1774ஆம் ஆண்டளவில் செய்துகொண்டிருந்த Küçük Kaynarca உடன்படிக்கையின் மூலம், ஒட்டோமான் பேரரசின் இராச்சியத்தில் வசித்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் பாதுகாவலராக ரஷ்யா மாறியது. மேலும் இதை தலையீடாகவும் பயன்படுத்தியது.
ரோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் சிரியாக் கிறிஸ்தவர்கள் தொடர்பாக பிரான்ஸ் இதேபோன்ற நிலைப்பாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பிரித்தானியாவும் பிரஷியாவும் இப்போது புராட்டஸ்டன்ட்களின் "பாதுகாவலர்களாக" ஒன்றிணைந்து, 1841ஆம் ஆண்டில் ஜெருசலத்தில் ஒரு கூட்டு பிஷப்ரிக்கை நிறுவி, யூத மதத்திலிருந்து அங்கிலிகன் மதம் மாறிய மைக்கேல் அலெக்சாண்டரை அருட் தந்தையாக நியமித்தன.
லெவண்டில் வசித்து வந்த புரட்டஸ்டன்ட்டுகள் சிலரை "பாதுகாக்கும்" பொருட்டு, பிரித்தானியர்கள் ஆர்மீனிய கிறிஸ்தவர்களாகவும் யூதர்களாகவும் மதம் மாறினார்கள். 1839ஆம் ஆண்டில் பால்மர்ஸ்டன் யங்கிற்கு தனது கடமைகளில் "பொதுவாக யூதர்களுக்கு பாதுகாப்பு அளிக்க" வேண்டும் என்று அறிவுறுத்தினார். 1847ஆம் ஆண்டில், FO இதை "அனைத்து தேசங்களில்" வசித்த யூதர்களுக்கும் விரிவுபடுத்தியது.
பலஸ்தீனத்தில் யூதர்கள் குறைவாகவே இருந்தனர் (3% மட்டுமே). அதனால் பிரித்தானியருக்கு யூதர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் இலாபம் கிடைத்தது. உயர்மட்ட ஸ்தாபனப் பிரமுகரான லார்ட் ஷாஃப்டெஸ்பரி என்பவர் (யூதர்களை "முரட்டுக்குணமுள்ளவர்கள், கருணையற்றவர்கள், ஒழுக்க சீர்கேட்டில் மூழ்கியவர்கள்" என்று அழைத்தார்).
இவர் பலஸ்தீனத்தில் யூத குடியேற்றத்திற்கான திட்டத்தை பால்மர்ஸ்டனிடம் கொடுத்தார். ஐரோப்பாவின் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குத் திரும்புவதற்கு ஒவ்வொரு நியாயமான ஊக்கத்தையும் துருக்கி அரசாங்கம் அளிக்க வேண்டும் என அன்று கான்ஸ்டான்டினோப்பிளில் பிரித்தானிய தூதுவராக ஆகிய இவர் துருக்கி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், கான்சல் யங் "பிரித்தானிய மறுசீரமைப்புவாதத்தை" ஆதரித்தார். இயேசு கிறிஸ்துவின் "இரண்டாம் வருகை", "புனித பூமியை" யூத மக்களுக்கு, பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் "மீட்டெடுப்பது" பயனாக இருக்கும் என்று நம்பினார்.
இது FOஇன் நிலைப்பாட்டை பிரதிபலித்தது. இது பாலஸ்தீனத்தை புனிதமான பண்டைய இஸ்ரேலாகக் கருதுகின்றது. மைக்கேல் டால்போட், அன்னே கால்டுவெல் மற்றும் சோலி எம்மொட் ஆகியோர் சுட்டிக்காட்டுவது போல், ஆங்கிலேயர்கள் இந்த நேரத்தில் மாகாணத்தின் பல வரைபடங்களை தயாரித்து, பாலஸ்தீனத்தை விவிலிய உருவத்தில் புனரமைக்க முயன்றனர்.
ஜைனப் பஹ்ரானியின் அவதானிப்பு எதிரொலியாக, ஐரோப்பியர்கள் பண்டைய மத்திய கிழக்கிலிருந்து மேற்கத்திய நாகரீகத்திற்கு நேரடியான முன்னேற்றத்தை உருவாக்கி, பண்டைய நிலப்பரப்புக்கும் அதன் நவீன மக்களுக்கும் இடையேயான தொடர்பை மறுத்து வந்தனர். பாலஸ்தீனத்தை காலனித்துவப்படுத்தவும், அதன் குடியிருப்பாளர்களை ஓரங்கட்டவும் பிரித்தானியா செய்த முயற்சிகளை இந்த சரித்திரம் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
"சீயோனின் போர் முனைகள்"
1839ஆம் ஆண்டில், கன்சல் யங், இலங்கைக்கு தரை வழியாக பயணம் செய்த இரண்டு விருந்தினரை வரவேற்றார். இவர்கள், ஒருவேளை உளவுத்துறை பணியின் நிமித்தம் பாலஸ்தீனத்தின் புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வந்திருக்கக்கூடும்.
எனினும், பின்னர் ஆஸ்டன் ஹென்றி லேயார்ட் என்பவர் இஸ்தான்புலில் வெளியுறவுத் துறையின் துணை செயலாளராகவும், தூதுவராகவும் இருந்தார். மேலும் எட்வர்ட் லெட்விச் ஆஸ்பால்டெஸ்டன் மிட்ஃபோர்ட் என்பவர் இலங்கையின் சிவில் சேவையில் இணைந்தார்.
1845ஆம் ஆண்டில், லெவண்டில் பிரித்தானிய கொள்கையுடன் தொடர்புடைய யூத தேசத்தின் சார்பாக ஒரு மேன்முறையீட்டில், மிட்ஃபோர்ட் எதிர்கால FO கொள்கையை எதிர்வுகூறினார்.
பலஸ்தீனியர்களால் தூய பாலஸ்தீனத்தில் பிரித்தானியர்-பாதுகாத்த யூத குடியேற்றத்திற்கான அவரது திட்டம், "லெவண்டில் உள்ள தமது விவகாரங்களை மீட்டெடுக்கும், தம்மை ஒரு கட்டளையிடும் நிலையில் வைத்திருக்கும்... இது கடும் தொடர்பாடல்களின் நிர்வாகத்தை முழுமையாக தமது கரங்களில் நிறுத்திவிடும்" என நம்பியிருந்தார்.
அவர் 1884ஆம் ஆண்டு வெளியிட்ட தனது புத்தகமான ‘A Land March from England to Ceylon’ என்ற நூலில் இதை மீண்டும் வலியுறுத்தினார். "இங்கிலாந்தை பாதுகாக்கும் பதாகையானது சீயோனின் போர்முனைகளில் இருந்து மீட்டெடுத்த இஸ்ரேல் இனத்தின் மீது பாயும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நான் நம்புகிறேன்" என இதில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை ஆதாரப்படுத்தும் வகையில் இதற்கு இணையாக தெற்கு அவுஸ்திரேலிய முன்னாள் ஆளுநர் ஜோர்ஜ் கவ்லர் இதே திட்டத்தை முன்மொழிந்தார். 1853ஆம் ஆண்டில், பாலஸ்தீனத்தில் மதப் பாதுகாவலர்கள் மீதான புவியியல்-அரசியல் போராட்டம் வெடித்தது.
போர்க்குணமிக்க அப்துல்மெஜித்தை FO ஊக்கப்படுத்தியது. கிரிமியன் போருக்கு இது வழிவகுத்தது. ரஷ்யா துருக்கி, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றுடன் போராடியது. இது பெரிய விளையாட்டில் பாலஸ்தீனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது.
யங்கினின் தூதரக வாரிசு ஜேம்ஸ் ஃபின், "ஒரு பெரிய அமைப்பில் உள்ள யூதர்களை இங்கு மண்ணில் விவசாயம் செய்பவர்களாகக் குடியேற வற்புறுத்துவதற்கான" ஒரு திட்டத்தை FOஇற்கு அனுப்பினார்.
அவர் ஜெருசலேத்திற்கு வெளியே யூதர்களுக்கான ஒரு பயிற்சிப் பண்ணையையும், பெத்லகேமுக்கு தெற்கே மற்றொரு பகுதியையும் நிறுவினார். இது புனித பூமியில் யூத விவசாயத் தொழிலாளர்களை மேம்படுத்துவதற்கான சங்கத்தால் நிதியளிக்கப்பட்டது.
ஃபின் முயற்சிகள் 1865ஆம் ஆண்டு அரை-இராணுவ பாலஸ்தீன ஆய்வு நிதியத்தை உருவாக்க வழிவகுத்தது. இது அந்த பகுதியை வரைபடமாக்கி உளவுத்துறையை சேகரித்தது. ஒரு நிறுவனர்-உறுப்பினர், ஆஸ்டன் ஹென்றி லேயார்ட் நிதியத்தின் ஆராய்ச்சியை குறிப்பாக யூத வரலாற்றை நோக்கி நகர்த்தினார்.
"மிகவும் இலாபகரமான சொத்து"
1869ஆம் ஆண்டில், சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. இதனால் பாலஸ்தீனத்தின் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்தது. எனவே, 1874ஆம் ஆண்டில் பதவியேற்றதும், பிரதம மந்திரி பெஞ்சமின் டிஸ்ரேலி லெவண்டில் பிரித்தானியாவின் நிலையை வலுப்படுத்தத் தொடங்கினார்.
ரஷ்ய-துருக்கி போர் வெடித்ததால், 1877ஆம் ஆண்டில் இஸ்தான்பவில் லேயர்டை தூதராக நியமித்தார். இரகசியமாக பிரித்தானிய உதவி இருந்தபோதிலும், துருக்கி போரில் தோற்றார். ஒட்டோமான் வீழ்ச்சி, ரஷ்யாவையும் பிரான்ஸையும் கையகப்படுத்தும் என லேயர்ட் எச்சரிக்கின்றார்.
இலங்கையின் பிரதம நீதியரசரின் மகனான லோரன்ஸ் ஒலிபான்ட், ரஷ்யர்களுக்கு எதிராக கிழக்கு ஐரோப்பிய யூதர்களை பாலஸ்தீனத்தில் குடியமர்த்த முன்மொழிந்தார் - சுல்தான் ஏழை கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் அகதிகள் பற்றி தவறான மனப்பான்மையுடன் இருந்தார்.
தாயகத்தின் செல்வந்த யூதர்கள் பைபிளின் மறுசீரமைப்பை ஆதரித்தார்கள். டிஸ்ரேலி, FO மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் அங்கீகாரத்துடனும் லேயார்டின் ஆதரவுடனும், யூத குடியேற்றத்தை உருவாக்கும் வகையில் சுல்தானை ஆதரிக்க அவர் தவறிவிட்டார்.
யூத குடியேற்றத்திற்கான வாய்ப்புகள் பற்றி ஆலிஃபண்ட் என்பவர் பாலஸ்தீனத்திலிருந்து FOஇற்கு அறிக்கை சமர்ப்பித்தார். இதை விரிவுபடுத்தி, அவரது த லாண்ட் ஆஃப் கிலியட் (1880) என்ற நூலில் அவர் நீடித்த யூத குடியேற்றத்திற்கான நடைமுறை வரைபடத்தை முன்வைத்தார்.
மாறாக சாத்தியமற்ற, சிதறிய குடியேற்றத் திட்டங்களையும் முன்வைத்தார். சியோனிஸ்டுகளால் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவரது திட்டமானது, தொழில்துறை மற்றும் விவசாய வளர்ச்சி ஆகியவற்றுடன் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் யூத பாலஸ்தீனத்தை முன்னெடுத்துச்செல்லும் முகமாக முன்வைக்கப்பட்டது.
‘வரம்புகளுக்குள் மடிந்து போன கடலை [சியோனிச அரசின்] சேர்ப்பது, அதன் இரசாயன மற்றும் கனிமப் படிவுகளை சுரண்டுவதன் மூலம் ஒரு பரந்த செல்வத்தை வழங்கும்... மடிந்து போன கடல் என்பது ஆராயப்படாத செல்வத்தின் சுரங்கமாகும். இதற்கு மூலதனத்தின் பயன்பாடு மட்டுமே தேவைப்படுகின்றது. நிறுவனத்தை மிகவும் இலாபகரமான சொத்தாக மாற்ற வேண்டும்’.
அவர் புகையிரத சேவைக்கு ஆதரவளித்தது மட்டுமல்லாமல், ஹைஃபாவில் இருந்த ஒரு புகையிரத டெர்மினஸுக்காக நிலத்தை வாங்கி, புகையிரத பாதையை வரைபடமாக்கி அதனை ஆய்வு செய்தார்.
எரெட்ஸ் இஸ்ரேல்
ஆங்கிலேயர்கள் ஒராபி பாஷாவை தோற்கடித்து எகிப்தின் ஆட்சியை 1882 ஆம் ஆண்டில் கைப்பற்றிய பிறகு, யூத தாயகத்திற்கான FOஇன் ஊக்கம் குறைந்தது. 1878ஆம் ஆண்டிற்கு பிறகு துன்புறுத்தப்பட்ட 2.5 மில்லியன் கிழக்கு ஐரோப்பிய யூத அகதிகளில் பெரும்பாலானோர் ஒட்டோமான், ஐரோப்பா, பிரித்தானிய பேரரசு அல்லது அமெரிக்கா என்பவற்றுக்கு சென்றனர்.
1870 -1915ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் யூதர்கள் 3% முதல் 5% வரை மட்டுமே பரந்திருந்த பாலஸ்தீனத்தை மிக சொற்பளவானவர்கள் மாத்திரமே தேர்ந்தெடுத்தனர். செல்வந்த பிரித்தானிய யூதர்கள், ஏகாதிபத்திய படைகளாக அல்லது காலனித்துவ அதிகாரத்துவத்தின் உறுப்பினர்களாக இருந்து, யூத அகதிகளை குடியேற்றங்களில், குறிப்பாக அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் குடியேற்ற விரும்பினர்.
1903ஆம் ஆண்டில், சியோனிஸ்டுகள் லியோபோல்ட் ஜேக்கப் க்ரீன்பெர்க் மற்றும் தியோடர் ஹெர்சல் ஆகியோர் காலனித்துவ செயலாளரான ஜோசப் சேம்பர்லைனுடன் உகாண்டாவில் உள்ள யூத தாயகத்துடன் கலந்துரையாடினர்.
பாலஸ்தீனத்திற்கான ஹெர்சலின் பார்வையைப் போலவே, பழங்குடி மக்களை ஒதுக்கித் தள்ள வேண்டும். சியோனிஷ தாயகம் ஒரு "குடியேற்ற அரசாக" இருக்க வேண்டும். ஆபிரிக்க சியோனிஷுக்கான பிரித்தானிய வைராக்கியம் மறைந்தது. எனவே சியோனிஸ்டுகள் மீண்டும் பாலஸ்தீனத்தில் கவனம் செலுத்தினர்.
அரச கடற்படை, நிலக்கரியிலிருந்து எண்ணெய்க்கு மாறியது. இதனால் பாரசீக வளைகுடாவில் எண்ணெய்யின் முக்கியத்துவம் அதிகரித்தது. 1915ஆம் ஆண்டில் பிரித்தானியா ஹுசைன், மக்காவின் ஷெரீப் என்பவருக்கு, அரபு நாடுகளின் (பலஸ்தீனம் உட்பட) மீது அரேபிய இறையாண்மையை உறுதியளித்தது.
ஒட்டோமான்களுக்கு எதிரான அரேபிய கிளர்ச்சி ஆங்கிலேயர்களை கவலையடையச் செய்தது. அருகாமையில் உள்ள யூத குடியேற்றம் மீண்டும் விரும்பத்தக்கதாக மாறியது. 1917ஆம் ஆண்டில், வெளியுறவு செயலாளர் ஆர்தர் பால்ஃபோர் யூதர்களுக்கு அவர்களின் "தேசிய புகலிடத்தை" ("Eretz Yisrael") உறுதியளித்தார்.
பிரித்தானியரால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் யூத குடியேற்றவாசிகள் 1920ஆம் ஆண்டில் 76,000 என்ற எண்ணிக்கையிலிருந்து 1948ஆம் ஆண்டில் 600,000 என்ற எண்ணிக்கையாக அதிகரித்தனர் (சனத்தொகையில் 32%). இது பாலஸ்தீனிய அமைதியின்மைக்கு எதிராக ஒரு அரணாக இருந்தது.
பிரித்தானிய பயிற்சி பெற்ற சியோனிஷப் படைகள் தங்கள் முன்னாள் எஜமானர்களை வெளியேற்றி, ஒரு சுதந்திர யூத அரசை உருவாக்கினர். அதன்பிறகு, அமெரிக்காவுடனான ஒரு சிறப்பு புவிசார் அரசியல் உறவின் மூலம், அவர்கள் Eretz Yisrael Ha-Shlema ("பெரிய இஸ்ரேல்") சியோனிஷ கனவை நிறைவேற்றத் தொடங்கினர்.
வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலை கற்ற வினோத் முனசிங்க, இலங்கையில் தேயிலைத் துறைசார்ந்த இயந்திரங்கள் மற்றும் மோட்டார் உதிரிப்பாகங்கள் தொழிற்துறையிலும், ரயில்வே துறையிலும் பணியாற்றினார்.
பின்னர் இதழியல் துறையில் கால்பதித்த அவர், வரலாறு தொடர்பாக எழுதி வருகின்றார். இலங்கை – ஜேர்மன் தொழிநுட்பப் பயிற்சி நிறுவனத்தின் ஆளுநர் குழுவின் தலைவராகவும் செயற்பட்டார்.
Factum என்பது சர்வதேச உறவுகள், தொழிநுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றி இலங்கையில் செயற்படும் ஆசியாவவை மையமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவாகும். www.factum.lk என்ற இணையத்தளத்தில் இது தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் யாவும் கட்டுரை ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் மற்றும் அவை எவ்வகையிலும் நிறுவனத்தை பிரதிபலிக்க மாட்டாது.
Comments (0)
Facebook Comments (0)