செரண்டிப் மா ஆலையின் புதிய தயாரிப்பான 'செவன் ஸ்டார் முதற்தர கோதுமை மா'
நாட்டின் மிகவும் நம்பகமான கோதுமை மா விநியோகஸ்தர்களில் ஒருவரான செரண்டிப் மா ஆலை, தனது புதிதாக அறிமுகமாகும் செவன் ஸ்டார் முதற்தர பேக்கரி கோதுமை மா உடன் வெதுப்பகத் தொழிற்துறையை முற்றிலும் மாற்றியமைக்க உள்ளது.
வெதுப்பக விசேடத்துவத்திற்கான புதிய நியமத்தை அமைத்தவாறு, செரண்டிப் மா ஆலையின் செவன் ஸ்டார் முதற்தர பேக்கரி கோதுமை மா 'அதிசிறந்த தயாரிப்புகள்' என்ற தாரக மந்திரத்துடன், தரம் மற்றும் செயற்திறனுக்கான புதிய நியமங்களை நிர்ணயித்து வெதுப்பகத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் தன் வாக்குறுதியை பிரதிபலிக்கின்றது.
புதிய செவன் ஸ்டார் முதற்தர பேக்கரி கோதுமை மா ஒரு முதற்தர உற்பத்தி என்ற வகையில், வெதுப்பகத் தொழிற்துறையின் அதிசிறந்த மற்றும் நம்பகமான மாவின் தரத்திற்கான தேவையை நிவர்த்தி செய்வதோடு, வெதுப்பக உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் என இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சியளிக்கும் சிறந்ததொரு மாற்றத்தை உறுதி செய்கிறது.
புதிய மாவானது வெதுப்பகத் தொழிற்துறைக்கு பல நன்மைகளைப் பெற்றுத் தருவதோடு, சிறந்த ஒரு இறுதிப்பொருளையும் விளைவாக்குகிறது. இந்த மாவானது பாண் மற்றும் பேஸ்ட்ரிகளின் தரத்தை அதிகரிப்பதோடு, தன்னிகரற்ற இறுதிப் பொருளைப் பெற்றுத்தந்து, வெதுப்பக உற்பத்திகளுக்கு திருப்திகரமான தோற்றத்தையும் உள்ளமைப்பையும் வழங்குகிறது.
புதிய மாவின் மூலம் வெதுப்பியின் மிகச்சிறந்த பலனைப் பெற முடிவதனால், நுகர்வோர் மற்றும் வெதுப்பக உரிமையாளர்களுக்கு நன்கு கட்டமைக்கப்பட்ட, மென்மையான மற்றும் சுவை மிகுந்த வெதுப்பக உற்பத்திகளுக்கான உத்தரவாதம் கிடைக்கின்றது.
மேலதிகமாக, இந்த உற்பத்தியானது மென்மையான, நன்கு கட்டமைக்கப்பட்ட கோதுமை மா தயாரிப்புகளை உருவாக்கத் தேவையான சரியான நிலைத்தன்மையையும் கட்டுமானத்தையும் வெதுப்பக உரிமையாளர்களுக்கு வழங்குகிறது. உயர்ந்த ஒட்டும் உள்ளடக்கத்துடன், செவன் ஸ்டார் முதற்தர பேக்கரி கோதுமை மாவானது அதிகரிக்கப்பட்ட நீர் அகத்துறிஞ்சலை செயற்படுத்துவதனால் வெதுப்பக உரிமையாளர்கள் அதிக பலனையும் இலாபத்தையும் எதிர்பார்க்க முடியும்.
செரண்டிப் மா ஆலையின் வர்த்தக நாமங்கள் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் காலிங்க விஜேசேகர கூறுகையில்,
"செவன் ஸ்டார் முதற்தர பேக்கரி கோதுமை மாவானது வெதுப்பக உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரதும் தேவைகளை நிறைவேற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய தயாரிப்புகளை அதியுயர் தரத்தைப் பின்பற்றி நாம் அறிமுகப்படுத்தும் அதேவேளை 'தேசத்தை வளப்படுத்துவோம்' என்ற எமது கொள்கைக்கு அமைவாக செயற்பட நாம் உறுதி பூண்டுள்ளோம். செவன் ஸ்டார் முதற்தர பேக்கரி கோதுமை மாவு, பேக்கரி தொழிற்துறையில் புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரவுள்ள ஒரு மெய்யான புரட்சிகரத் தயாரிப்பாகும்" என்று தெரிவித்தார்.
செவன் ஸ்டார் முதற்தர பேக்கரி கோதுமை மா கவர்ச்சிகரமான விலையில் வழங்கப்படுவதோடு, இது செரண்டிப் மா ஆலை தனது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியைப் வழங்குவதற்கான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
அதியுயர் தரத்தை உறுதி செய்யும் அதேவேளை, கட்டுப்படியான விலையினையும் நிறுவனம் கவனமாகப் பேணி வருகிறது. வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த ஆரம்பகால வரவேற்பு மிகவும் நேர்மையானது, இது தயாரிப்பின் கவர்ச்சி மற்றும் செயற்திறனை உறுதிப்படுத்துகிறது.
செவன் ஸ்டார் முதற்தர பேக்கரி கோதுமை மாவின் அறிமுகமானது, நிறுவனத்தின் விசேடத்துவம், புதுமை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
Comments (0)
Facebook Comments (0)