பேச்சு, கருத்துச் சுதந்திரங்களிற்கு கட்டுப்பாடுகள் விதித்து ஜனநாயக உரிமைகளை நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க அறைகூவல்

பேச்சு, கருத்துச் சுதந்திரங்களிற்கு கட்டுப்பாடுகள் விதித்து ஜனநாயக உரிமைகளை நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க அறைகூவல்

ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரான வகையில் மக்களின் கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடல் சுதந்திரம் மற்றும்  குடியியல் செயற்பாட்டு  நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் அடக்கு முறை சட்டங்களை அமுல் படுத்தி, நாட்டில் சர்வாதிகாரத்தை மேற்கொள்வதற்கு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் முயற்சி தொடர்பாக சமூக அரசியல் முறைமையில் நன்மை பயக்கும் பல மாற்றங்களை எதிர் பார்க்கும் குடிமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்ற வகையில் நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

இந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி கொள்ள திட்டமிட்டுள்ள நிகழ்நிலை முறைமைகளின் பாதுகாப்புத் தன்மை தொடர்பான வரைவு உட்பட பொது அடக்கு முறை வரைவுகளைப் பார்க்கும் போது எமக்கு விளங்கும் விடயம் என்ன என்றால் நாட்டிலுள்ள குடிமக்களை அச்சுறுத்தி, மக்களின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கி எவ்வாறாயினும் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுக்காக  முன்னெடுத்துச் செல்ல முயலும் சூட்சுமமான செயலாகும் என்பதே. மக்கள் ஆணையால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி, மக்களின் மூலம் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தில் இத்தகைய பொது அடக்கு முறை வரைவுகளை நிறைவேற்றிக் கொண்டு புதிய சட்டங்கள் இயக்குவதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்பதே குடிமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் சங்க நடவடிக்கையாளர்கள என்ற வகையில் இந்த பிரசுரத்தில் கையொப்பம் இடும் நம் எல்லோரின்தும் ஏகோபித்த நம்பிக்கை ஆகும்.

மக்கள் மீது சுமத்திய பெரும் சுமைகளின் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் 'முறைமை மாற்றம்' மற்றும் ஊழலற்ற, மக்கள் நலன் காக்கும் ஜனநாயக ஆட்சி ஒன்று வேண்டும் என்று நடாத்திய மக்கள் போராட்டத்தின் பின்னர் நடைபெற இருக்கும் தேர்தலானது பொது மக்களுக்கு எந்த விதமான பாதகங்கள் இல்லாத  தெளிவான, பக்கச் சார்பற்ற, சமத்துவமான மற்றும் பக்கச் சார்பற்ற கருத்துக்களை அணுகுவதை உறுதி செய்யும், விவாதங்கள் மற்றும் பேச்சு வார்த்தைகளுக்கு பொருத்தமான மக்கள் மேடையை வழங்கும், சுதந்திரமானதும் நியாயமானதுமான ஒரு தேர்தலாக இருப்பது அத்தியாவசியம்.

நாட்டின் குடிமக்களின் வாயை அடைக்கும், மக்களை அச்சுறுத்தும் சட்ட திட்டங்கள் மக்கள் நலனுக்கும் ஜனநாயகத்திற்கும் விழும் மரண அடியாகும். நீண்ட காலமாக அரசியல் வாதிகளாலும், ஊழல் அதிகாரிகளினாலும் மெண்டு ஏப்பம் விடப்பட்ட எமது நாட்டுக்கு இனியும்  சட்டத்துக்கு மேலாக சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் எவரும் தேவையில்லை.எமது நாட்டில் சட்ட ஒழுங்குடன் கூடிய ஜனநாயக ஆட்சி முறை ஒன்று உடனடியாக நிறுவப்பட வேண்டும் என்பதே எமது ஏகோபித்த நம்பிக்கை ஆகும்.

அந்த வகையில் நாட்டின் ஒன்றிணைந்த குடிமக்கள் ஆகிய நாங்கள்  ஜனாதிபதி தலைமையிலான அரசு, எதிர் கட்சி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக்கொள்வது என்ன என்றால் நாட்டுக்குப் பாதகமான  வழி முறைகளைப் பின் தொடர்ந்து நாட்டு மக்களுக்குப் பாதகமான செயற்திட்டங்களை உடனடியாக நிறுத்தி, பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் சுமை போன்ற பல்வேறு    காரணங்களுக்காக அரசுக்கு எதிராக எழுந்து கொண்டிருக்கும் மக்கள் குரல்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைக் கை விட்டு  இப்போதாவது ஜனநாயக ஆட்சி முறையை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதாகும்.

அரசாங்கத்தின் நிகழ் நிலை முறைமைகளின் பாதுகாப்புத் தன்மை தொடர்பான வரைவு, மனுதாரர்கள் 45 பேரினால் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதுடன்,மனு விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இயற்றப்பட்ட வரைவில் 35 சரத்துக்கள்  திருத்தப்பட வேண்டும் என்று உத்தேசித்து இருப்பதாக நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டிய நிலை சட்டமா அதிபருக்கு ஏற்பட்டது.

மனு விசாரணையின் பின்னர் வரைவில் 31 சரத்துக்கள் திருத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையில் உலக அங்கீகாரம் பெற்ற பல நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட 'ஆசிய வலைப் பின்னல் கூட்டணி' உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு முன்பும் பின்பும் அரசின் விடயப் பொறுப்பு அமைச்சருக்கு இரண்டு நீண்ட கடிதங்கள் அனுப்பி குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில் இந்த வரைவில் சர்வதேச ஒழுங்கு விதிமுறைக் கோட்பாடுகள் மீறப்பட்டு இருப்பதாக  சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் இந்த வரைவின் செல்லுபடியாகும் தன்மை முற்றிலும் இரத்துச் செய்யப்பட்டதுடன், தன்மானமுள்ள ஒரு அரசாங்கமாக இருந்தால் இதைத் தூக்கி குப்பை கூடையில் எறிந்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் ஜனவரி 23 ம் திகதி மீண்டும் இதனை பாராளுமன்றத்தில் முன் வைத்து திருத்தத்துடன் கூடிய வரைவினை நிறைவேற்றிக் கொள்ள ஜனாதிபதி தலைமையிலான அரசு வெட்கக்கேடான முயற்சியை எடுத்துக் கொண்டு இருக்கிறது.

உயர் நீதிமன்றத்தில் இந்த வரைவு ஒரு சவாலாக அமைந்ததுடன் முதல் தினத்திலேயே சட்டமா அதிபரினால்  35 திருத்தங்கள் முன் மொழியப்பட்டதும் சட்டமா அதிபர் திணைக்களமும் அவமானத்துக்குள்ளானது.

வேறு ஒரு நபரால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தை சரியாக படிக்காமல், சட்டமா அதிபர் இந்த வரைவை அங்கீகரித்து முன் வைத்து இருப்பது எமக்குத் தெளிவாகிறது. மிகவும் கடுமையான வார்த்தைகளைக் கொண்ட ஒரு ஆவணத்தை சட்டமாக இயற்ற எடுத்துக் கொண்ட இந்த குறுகிய முயற்சி எமது நாட்டுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருப்பதை நாம் காண்கிறோம்.

இதனால் நாட்டுக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் ஏற்பட்ட கலங்கத்திற்கு இழப்பீடு வழங்கும் வகையில் சட்டமா அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது எமது கூட்டுக் கருத்தாகும். அத்துடன் நாட்டை மேலும் மேலும் கலங்கத்திற்கு உள்ளாக்கும் இந்த கடுமையான வரைவை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடு.

இணைய கட்டுப்பாட்டுக்கான  வரைவு ஒன்று தேவையில்லை என்பது தான் எமது கருத்து. இணைய வழி நிகழும் தவறுகளுக்கு நடைமுறைப்படுத்தக்கூடிய போதியளவு சட்டங்கள் எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று நாம் நம்புகிறோம்.

நிகழ் நிலை முறைமைகளின் பாதுகாப்புத் தன்மை சம்பந்தப்பட்ட வரைவு தொடர்பாக உயர் நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சரினால் சரியாக உள்வாங்கப் படவில்லை என சட்ட நிபுணர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

இது மிகவும் தீவிரமான ஒரு நிலை ஆகும். எனவே, இந்த வரைவு 2/3 கற்கும் அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நாம் கடுமையாக வலியுறுத்துகிறோம்.

அத்துடன் இந்த வரைவை இரண்டாம் வாசிப்புக்கு முன் வைக்காது உடனடியாக இது மீளப் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆசிய இணைய கவுன்சில், தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபையினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, பங்கதாரர்கள் உடன் மிக நீண்ட ஆலோசனைப் பேச்சு வார்த்தை செயற்பாடு ஒன்று நடத்திய பின்னர் இத்தகைய வரைவு தேவை என்றிருந்தால், அதனைத் தயாரிக்கும் தீர்மானத்தை எடுக்கும் படி நாம் அரசாங்கத்துக்கு வலியுறுத்தி கூறுகிறோம்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது இருக்கும் கொடூர சித்திரவதை குற்றச்சாட்டு தொடர்பில், அவர் குற்றவாளி என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில் அவரை இன்னும் பதவி விலக்காமல் பதவியில் வைத்திருப்பதன் மூலம் ஜனாதிபதி தலைமையிலான அரசு மக்களின் நம்பிக்கை கொள்கையின் அடிப்படை ஆணிவேராக இருக்கும் நீதிமன்றத்தை அலட்சியம் செய்து அவமதிக்கும் வகையில் சர்வாதிகார ஆட்சியை நடத்தும் அபிலாஷை  எமக்கு தெளிவாக புரிகிறது.

நாட்டில் தனியார் துறையில் பணியாற்றி வரும் 36 இலட்சம் பணியாளர்களை நேரடியாக பாதிக்கும் தொழிற்சங்க கட்டளைகள் சட்டம், தொழில் தகறாறு சட்டம் மற்றும் சம்பள நிர்வாக கட்டளைகள் சட்டம் உட்பட 13 சட்டங்கள் இரத்துச் செய்யப் பட வேண்டும்.

தொழிற்சங்க நடவடிக்கையாளர்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் படி அல்லாமல் 'சேவை வாய்ப்பு' எனும் பெயரில் தனியான தொழிலாளர் சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு அரசு முயற்சி செய்கிறது. அரசின் இந்த முயற்சியும் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடுக்கும் குறுகிய நோக்கில் பின்பற்றும் அரச கட்டுப்பாடுகளும் மக்கள் 'ஒன்று கூடல்' உரிமைக்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் ஒரு அடையாளம் என்பது எமக்கு புலனாகிறது. இவை அனைத்தையும் ஜனநாயகம் எனும் வட்டத்துக்குள் கொண்டு வரும் படி நாம் அரசாங்கத்துக்கு வலியுறுத்தி கூறுகிறோம்.

இந்த அனைத்து காரணங்களையும் தவிர்த்து, இனியும் அரசாங்கம் இந்த வரைவை பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு முன் வைத்தால், அது மூன்றாவது வாசிப்புக்கு பின்னர் வாக்கெடுப்பு ஒன்று நடத்தி தோற்கடிக்குமாறு  நாம் அரச கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் முற்போக்கு மக்கள் பிரதிநிதிகள் உட்பட எதிர் கட்சி அமைச்சர்கள் இடமும் கண்ணியமாகக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இந்த சட்ட வரைவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் அமைச்சர்கள் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட முடியாத வகையில் ஜனநாயக செயற்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், பொதுத் தேர்தலில் இவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் என்று நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

பொதுத் தேர்தலில் இவர்களை தோற்கடிப்பதற்கான சகல செயற்பாடுகளையும் கூட்டிணைந்து செய்வதற்கு குடிமக்கள் ஆகிய நாம் பின் நிற்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம்.

இவை அனைத்துக்கும் மத்தியில் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, ஜனாதிபதி அவர்கள் சர்வாதிகார ஆட்சியாளராவற்கு எடுக்கும் முயற்சியை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யப் பட வேண்டும் அல்லது மிகக் குறுகிய காலத்துக்குள் ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் நாட்டு மக்கள் அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழக்கூடிய ஜனநாயக நாட்டை உருவாக்கிட அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என சகல மக்கள் பிரதிநிதிகள் இடமும் கேட்டுக் கொள்வதோடு, சகல அரசியல் கட்சிகளுக்கும் இதனை வலியுறுத்தி கூறுகிறோம்.

அமைப்புக்கள்

1.    Free Media Movement
2.    Sri Lanka Working Journalists’ Association
3.    Young Journalists’ Association of Sri Lanka
4.    Media Law Forum
5.    Law and Society Trust
6.    National Cooperative Development Fund
7.    Hashtag Generation
8.    Association of Health Professionals
9.    Sri Lanka Postal and Telecommunication Service Union
10.    All Ceylon Management Service Officers’ Union
11.    South Asia Free Media Association
12.    Ceylon Teachers’ Union
13.    Ceylon Trade Union Federation
14.    United Postal Trade Union Front
15.    Savisthri National Women’s Moment
16.    Uva Wellassa Women’s Organization
17.    Movement for the Defence of Democratic Rights (MDDR)
18.    Free Media Movement Tarde Union (FMMTU)
19.    Ceylon Teachers’ Union
20.    Moment for Land and Agriculture Reform (MONLAR)
21.    National Fisheries Solidarity Movement (NAFSO)
22.    Shramabhimani Center  
23.    Dabidu Collective
24.    Women’s Action for Social Justice (WASJ)
25.    United Federation of Labour (UFL)
26.    Federation of Media Employees Trade Unions (FMETU)
27.    Muslim Media Forum
28.    Jaffna Press Club
29.    Tamil Women Journalists Association
30.    Tamil Media Alliance
31.    Transparency International Sri Lanka
32.    Free Trade Zone Union
33.    South Asian Women in Media Network- Sri Lanka
34.    Ceylon Bank Employees Union (CBEU)
35.    South Asian Free Media Association
36.    People’s Commission of Women in Sri Lanka
37.    The Voice of Truth
38.    Stand Up Movement in Sri Lanka
39.    Trade Union to Upliftment of Sri Lanka Railway
40.    Freedom Trade Union Center (FTUC)
41.    Prabha Abhilasha Network
42.    People’s Alliance for Right to Land (PARL)
43.    Voice of the plantation people organization (VoPP)
44.    Sri Lanka All Telecommunication Employees’ Union
45.    Unite – Trade Union and Mass Organization Collective
46.    Media.LK
47.    RED Organization
48.    Nature Foundation
49.    Media Pro-Tech
50.    PEN Sri Lanka
51.    National Movement for Social Justice
52.    Standup Workers Union
53.    Asian Media and Cultural Association
54.    Women Center Sri Lanka
55.    Protect Union
56.    Human Rights Documentation Center (INFORM)

தனிநபர்கள்

1.    Father Sarath Iddamalgoda
2.    Prof Arjuna Pararkarama
3.    Prof Liyanage Amarakeerthi
4.    Prof Nirmal Ranjith Dewasiri
5.    Prof Vijaya Jayathilaka
6.    Dr Ravindra kariyawasam
7.    Dr Rathna Sri Wijesinghe
8.    Dr Kalpa Rajapaksa
9.    Senior Lecturer Anuruddha Pradeep Karnasuriya
10.    Thusitha Siriwardena, Attorney at Law
11.    D M Dissanayake, Attorney at Law
12.    Journalist Seetha Ranjanee
13.    Journalist Hana Ibrahim
14.    Journalist Upali Kolambage
15.    Journalist Ananda Dharmapriya Jayasekara
16.    Journalist Thimbiriyagama Bandara
17.    Journalist Saroj Pathirana
18.    Journalist T M G Chandrasekara
19.    Senior researcher Sarath Kellapatha
20.    Journalist Tharindu Iranga Jayawardena
21.    Journalist Sujeewa Senarath
22.    Littérateur S Nandalal
23.    Social Activist Jayani Abeysekara
24.    Journalist Jayasiri Jayasekara
25.    Journalist Prasad Poornimal
26.    Journalist Shalika Wimalasena
27.    Civil and Human Rights Activist Cyril Pathirage
28.    Creativist Nandasiri Dhrmaratne
29.    Dramatist and Civil Activist Roy Rodrigo
30.    Journalist Indika Roshan Garusinghe
31.    Journalist Chamara Sampath
32.    Civil and Human Rights Activist Suranga Rupasinghe
33.    Journalist Priyan R Wijebandara
34.    Environmentalist Hemantha Withanage
35.    Environmentalist Sajeewa Chamikara
36.    Trade Unionist Chinthaka Bandara
37.    Dramatist Ranasinghe Adhikari
38.    Lyricist Sudath Gamini Bandara
39.    Social Activist Thamara Dayani Heetimullage
40.    Shrinath Perera, Attorney at Law
41.    Journalist Nayanajeewa Bandara
42.    K.W. Janaranjana, Attorney at Law
43.    Journalist K. Sanjeewa
44.    Journalist Lasantha Ruhunage
45.    Journalist Sunil Jayasekara
46.    Journalists Sakeef
47.    Marine Engineer Kamal Wanniarachchi
48.    Social Activist Manjula Gajanayake
49.    Journalist Manjula Wediwardhana
50.    Social Activist Udaya Kalupathirana
51.    Economist Umesh Moramudali
52.    Social Activist Sandaya Eknaligoda
53.    Journalist Poddala Jayantha
54.    Journalist Thushara Weerarathna
55.    Journalist Jini Jayasekara
56.    Journalist R. Yasiharan
57.    Social Activist Saman Senevirathna