பதிவாளர் நாயகம் திணைக்களத்துடன் நிதியியல் உளவறிதல் பிரிவு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, பணம் தூயதாக்குதல், பயங்கரவாதி நிதியிடல் மற்றும் இணைந்த குற்றங்கள் தொடர்பில் நம்பிக்கைப் பொறுப்புக்கள் மற்றும் ஆதனப் பதிவுகளுடன் தொடர்புடைய நம்பிக்கைப் பொறுப்புக்கள், ஆதனப் பதிவுகள் அத்துடன் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்துடன் இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் நிதியியல் உளவறிதல் பிரிவினால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் டபிள்யு.ஆர்.ஏ.என். எஸ்.விஜயசிங்க மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் முனைவர் சுபாணி கீர்த்திரட்ண ஆகியோர் தொடர்புடைய நிறுவனங்கள் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற இயலளவில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் முனைவர். பி. நந்தலால் வீரசிங்கவின் பிரசன்னத்துடன் கைச்சாத்திடப்பட்டது.
சட்ட ரீதியான ஆட்களும் சட்ட ரீதியான ஒழுங்கேற்பாடுகளும் பணம் தூயதாக்குதல், பயங்கரவாத நிதியிடல் அத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்கு தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் அத்துடன் இதன் வாயிலாக தேசிய மற்றும் உலகளாவிய பொருளாதார மற்றும் நிதியியல் முறைமைகளின் உறுதிப்பாட்டை அச்சுறுத்தக்கூடும் சட்ட ரீதியான ஒழுங்கேற்பாடு என்பது வெளிப்படையான நம்பிக்கைப் பொறுப்பு, நம்பிக்கைக் கணக்கு அல்லது பெயர்குறிக்கப்பட்ட ஒருவர் என்பவற்றை உள்ளடக்குகின்றது.
நம்பிக்கைப் பொறுப்புக்கள், ஆதனப் பதிவுகள் மற்றும் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பில் நிதியியல் உளவறிதல் பிரிவிற்குத் தகவல்களை வழங்குவதற்கு பதிவாளர் நாயகம் திணைக்களத்தை இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதிப்படுத்தும்.
இது பணம் தூயதாக்குதல், பயங்கரவாத நிதியிடல் மற்றும் தொடர்புடைய குற்றங்களைத் தடுத்தலுக்கும் கண்டுபிடிப்பதற்கும் வழக்குத் தொடுத்தலுக்கும் இன்றியமையாது அமைந்திருக்கும்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதன் மூலம் இலங்கைச் சுங்கம், இலங்கைப் பொலிஸ், குடிவரவு குடியல்வுத் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், ஆட்களைப் பதிவுசெய்வதற்கான திணைக்களம், இலங்கை மதுவரித் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி சார்த்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு போன்ற உளவறிதல் நோக்கங்களுக்காக தகவல்களை பகிர்ந்துகொள்வதற்காக 15 உள்நாட்டு அரசாங்க முகவராண்மைகளுடன் நிதியியல் உளவறிதல் பிரிவு - புரிந்துணர்வு ஒப்பந்தங்களை சைச்சாத்திட்டுள்ளது.
நிதியியல் உளவறிதல் பிரிவு வெளிநாட்டு இணைத் தரப்பினர்களுடனும் 45 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)