இராஜாந்திரிகள் அமைப்பின் தலைவராக கட்டார் தூதுவர் தெரிவு
றிப்தி அலி
கொழும்பினைத் தளமாகக் கொண்டு செயற்படும் இராஜாந்திரிகள் அமைப்பின் தலைவராக இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல்-சொரூர் அண்மையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதன் தலைவராக செயற்பட்ட பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். டார் செயிட், தனது பணிகளை நிறைவுசெய்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கட்டார் தூதுவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இராஜாந்திரிகள் அமைப்பின் தலைவராக இலங்கையில் பணியாற்றும் சிரேஷ்ட இராஜதந்திரியே தெரிவுசெய்யப்படுவது வழமையாகும். அந்த அடிப்படையிலேயே கட்டார் தூதுவர் இப்பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் தனது கடமைகளை அண்மையில் இடம்பெற்ற இராஜாந்திரிகள் அமைப்பின் நிகழ்வொன்றில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கைக்கான கட்டாரின் நான்காவது தூதுவரான இவர், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கடமையாற்றி வருகின்றார். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்துவதற்காக பல்வேறு செயற்திட்டங்களை இவர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)