மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் உயிரிழந்த அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு வக்பு நிதியத்தினால் நஷ்டஈடு

மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் உயிரிழந்த அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு வக்பு நிதியத்தினால் நஷ்டஈடு

மாவடிப்பள்ளி பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்த அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு வக்பு நிதியத்தினால் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் அனர்த்தத்தில் உயிரிழந்த அரபுக் கல்லூரி மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள  பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸின் பரிந்துரையில் வக்பு சபை மற்றும் திணைக்களம் ஆகியன இணைந்து வக்பு நிதியம் எனப்படும் முஸ்லிம் தரும நம்பிக்கை நிதியத்திலிருந்து இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அரபுக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களிடம் குறித்த நஷ்டஈடுக்கான காசோலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை  (08) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஊடாக இந்த நஷ்டஈடு வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ. பிர்னாஸ், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், முஸ்லிம்  சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கணக்காளர் ௭ஸ்.௭ல்.எம். நிப்றாஸ் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள  கொழும்பு மாவட்டத்துக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்  எம்.ஐ.எம்.மஸீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.