சவூதி தூதுவரின் பங்கேற்புடன் நிவாரணப் பொதிகள் வழங்கல்
சவூதி அரேபியாவின் மக்காவினை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலக முஸ்லிம் லீக்கின் கொழும்பு அலுவலகத்தினால் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதியினருக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.
கொலன்னாவை பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கலந்துகொண்டு நிவாரப் பொருட்களை உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.
உலக முஸ்லிம் லீக்கின் கொழும்பு அலுவலகத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முஹம்மது இம்ரான் ஜமால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1,780 குடும்பங்களுக்கு தலா 9 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சகோதர மக்களுக்கு உலக முஸ்லிம் லீக்கினால் வழங்கப்பட்டும் இந்த நிவாரண உதவிகளுக்கு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் நன்றி தெரிவித்தார்.
இஸ்லாத்தின் விழுமியங்களை ஒருமைப்பாட்டுடனும் அன்புடனும் மதிக்கும் உலக முஸ்லிம் லீக்கின் மனிதாபிமான செய்தியினை மேம்படுத்துவதற்காக இந்த உதவி வழங்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)