உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு லபாரின் பெயர் முன்மொழியப்படவில்லை
மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் 3ஆவது சிரேஷ்ட நீதியரசாரக செயற்படுகின்ற நீதியரசர் எம்.டி.எம். லபாரின் பெயர் உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு முன்மொழியப்படாத விடயம் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவினால் சிபாரிசு செய்யப்பட்ட நான்கு மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய நீதியரசர்களான சோபித ராஜகருண, மேனக விஜயசுந்தர, சம்பத் அபயகோன் மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோரே ஜனாதிபதியினால் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் 3ஆவது சிரேஷ்ட நீதியரசாரகவுள்ள எம்.டி.எம். லபாரின் பெயர் உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு முன்மொழியப்படவில்லை. நீதியரசர் லபார் எதிர்வரும் ஜுன் மாதம் 63 வயதினை எட்டியதும் நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சன்டே டைம்ஸ்
Comments (0)
Facebook Comments (0)