இலங்கையுடனான ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பரவும் வதந்திகளை மறுக்கும் அதானி நிறுவனம்
இலங்கையில் அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பரவும் வதந்திகளை அதானி கிரீன் எனர்ஜி SL Ltd. திட்டவட்டமாக மறுக்க விரும்புகிறது.
ஒரு கிலோவாட் மணித்தியாலத்திற்கு 7 சதம் ஆக விலையை மாற்றியமைக்க நாங்கள் முன்வந்துள்ளதாக கூறும் கூற்றுக்கள் முற்றிலும் தவறானவை மற்றும் அடிப்படையற்றவை.
சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளுடன் நிறுவப்பட்ட ஒப்பந்தத்தின் ஆரம்ப விதிமுறைகளுக்கு நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். அதானி கிரீன் எனர்ஜி SL Ltdஇன் முதலீட்டுத் திட்டங்களும் திட்ட அளவுருக்களும் மாறவில்லை.
முன்மொழியப்பட்ட காற்றாலை திட்டத்திலிருந்து அதானி குழுமம் சுயமாக மற்றும் மரியாதையுடன் விலகியிருந்தாலும், இலங்கை அரசாங்கம் ஏதாவது சந்தர்ப்பத்தில் நிறுவனத்தின் பங்களிப்பை கருதும் பட்சத்தில், எந்தவொரு மேம்பாட்டு வாய்ப்பையும் மேற்கொள்ள அதானி குழுமம் எப்போதும் தயாராக இருக்கும் என மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பேச்சாளர், அதானி குழுமம்
Comments (0)
Facebook Comments (0)