கொரோனாவை ஒழிப்போம்

கொரோனாவை ஒழிப்போம்

சீனப்பெயர் எடுத்து
சீரழிக்க வந்துதித்த
மாயக் கொரனாவே
மறைந்துவிடு
கோபத்தைக்காட்டி ஆபத்துக்குள்ளாக்கும்
கோரச் செயலை நிறுத்திவிடு

உரிய மருந்தின்றி
உலகமக்கள் நாள்தோறும்
ஒப்பாரி மரண ஓலம்
உலகம் உனை அழிக்க
மருந்தாய்பு செய்கிறது
அதிகெதியில் அழிந்தொழியும்
நாள் வரும்பார்

உன் கோரச் செயலால்
மரணித்த உடலுக்கு
மதச் சடங்கின்றி
நெருப்பிலே சங்கமம்
வளிபாட்டுத் தலங்களெல்லாம் வழமைபோல் வணக்கம் செய்ய வழியின்றி மூடுவிழா

மாடி மனை குடிசை வாழ் மக்களெல்லாம்
பதினாலு நாள் தனிமைச் சிறைவாழ்க்கை
தாய் பிள்ளை பாசமெல்லாம்
உன் செயலால் உறவறுந்து பரிதாபத்துக்குள்ளானது

செய்தொழிலை செய்யவிடாது
தினக்கூலியாளை
திண்டாட வைத்து
வர்த்தகம் வானிபம்
பட்டின கடையடைப்பும்
ஊரையும் உறங்கல் நிலைக்குள் தள்ளிவிட்டாய்

அரச நன்கொடை 5,000
ஆறுதல் தந்தாலும்
அல்லலுறும் தொழிலாளி வறுமையால் தவிப்பு
இவ்வுதவி
யானைப் பசிக்கு சோழப் பொரி போல
வழியின்றி ஏழைத்தொழிலாளர் ஏங்கித் தவிக்கின்றான்

சாதி மத பேதமின்றி
சகலரும் ஒன்றினைவோம்
சட்டம் சொல்வதை மதித்திடுவோம்
கேடுகெட்ட மாயக் கொரோனாவை
நாடு விட்டு துறத்திடுவோம்
தாய் நாட்டை காத்திடுவோம்
தரணிபுகழ் வாழ்ந்திடுவோம்

கலாபூஷணம் நெய்னா முஹம்மது
கல்முனை