'ஹஜ் கடமையினை நிறவேற்ற வெளிநாட்டு யாத்திரீகர்களுக்கு அனுமதியில்லை'
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையினை மேற்கொள்ள வெளிநாட்டு யாத்திரீகர்களை அனுமதிப்பத்தில்லை என சவூதி அரேபிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று (22) திங்கட்கிழமை சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, சவூதி அரேபியாவில் வாழுகின்றவர் வௌ;வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை மாத்திரம் ஹஜ் யாத்திரீகைக்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், வரையறுக்கப்பட்ட யாத்திரீகர்கள் மாத்திரமே இந்த வருடம் ஹஜ் கடமையினை நிறைவேற்ற அனுமதிக்கப்படவுள்ளனர். சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளiமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த தீர்மானம் தொடர்பில் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சர், இலங்கை ஹஜ் குழுவின் தலைவரான மர்ஜான் பளீலினை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனால், இந்த வருடம் ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக முகவர்களிடம் முற்பணம் செலுத்தியவர்கள் அதனை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை ஹஜ் குழுவின் தலைவரான மர்ஜான் பளீல் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் ஹஜ் முகவர்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)