நிதி விவகாரங்கள் குறித்த இந்திய – இலங்கை பேச்சுக்கள் தொடர்பான கேள்விக்கான பதில்
நிதி விவகாரங்கள் குறித்த இந்திய இலங்கை பேச்சுக்கள் தொடர்பாக ஊடகமொன்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர்,
"இலங்கை பொருளாதாரத்தின் வெளிமட்ட துறையினை கவனத்தில் கொண்டு சார்க் மற்றும் ஏனைய இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பரஸ்பர பரிமாற்றல் மற்றும் இந்தியாவுக்கான இலங்கையின் கொடுப்பனவுகளை மீள ஒழுங்கமைத்தல் ஆகியவிடயங்களில் இருநாடுகளும் மிகவும் நெருக்கமானதும் வினைத்திறன் மிக்கதுமான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து தலைமைத்துவ மட்டங்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன் அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரதும் உயர்மட்டத்தினரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் தேவைகள் குறித்த உத்தியோகபூர்வமான பேச்சுக்களை மேலும் துரிதப்படுத்துதல் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் நேற்றும் இன்றும் கொழும்பில் உயர்மட்ட பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார்.
கொவிட்டுக்கு பின்னரான உலகில் பகிரப்பட்ட செழுமை மற்றும் நிலையான பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்காக இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதற்கு இந்தியா தயாராக உள்ளது.
Comments (0)
Facebook Comments (0)