'நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்தினரை பாதுகாப்பதற்கு மாறாக அரச சார்பற்ற நிறுவனங்களை பாதுகாத்தது'

'நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்தினரை பாதுகாப்பதற்கு  மாறாக அரச சார்பற்ற நிறுவனங்களை பாதுகாத்தது'

நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்தினரை பாதுகாப்பதற்கு மாறாக அரச சார்பற்ற நிறுவனங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகல் குளியாபிட்டிய பிரதேசத்தில் இன்று (27) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய பிரதமர்,

முப்பது ஆண்டுகள் யுத்தம் புரிந்து, பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கழித்த யுகத்தை முடிவுக்கு கொண்டுவர தமது அரசாங்கத்திற்கு முடியுமானதாயிற்று. அன்று தமிழ் இனத்திற்கு எதிராக போர் நடத்தப்பட்டது என வெளிக்காட்ட முயற்சித்த போதிலும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் இடம்பெற்றது தமிழ் மக்களை காப்பாற்றியது மாத்திரமே.

ஆறிற்கும் நான்கிற்கும் வித்தியாசம் தெரியாத பிள்ளைகளின் கைகளுக்கு ஆயுதங்களை வழங்கி கழுத்தில் சைனட் குப்பியை தொங்கவிட்ட யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து சிங்களம், தமிழ், முஸ்லிம் பேதமின்றி அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கு முடியுமானதாகி உள்ளதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான வேலைத்திட்டத்திற்கு எதிராக சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற சதி செயற்பாடுகளுக்கு முந்தைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியதாக சுட்டிக்காட்டிய பிரதமர், அவ்வாறான அரசாங்கத்தை மீண்டும் உருவாக்குவதா என்பது தொடர்பில் மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.