பொலன்னறுவை நகரில் 3 தினங்களுக்கு நீர் விநியோகத் தடை

பொலன்னறுவை நகரில் 3 தினங்களுக்கு நீர் விநியோகத் தடை

பொலன்னறுவை நீர் வழங்கல் திட்டத்திற்குட்பட்ட கல்லேல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியவசிய திருத்த வேலைகள் காரணமாக, இன்று 03ஆம் திகதி முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் நேரத்தில் பின்வரும் பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

பொலன்னறுவை நீர் வழங்கத்தின் திட்டத்தின் மூலம் நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளான பொலன்னறுவை பெரிய ஆஸ்பத்திரி, பொலன்னறுவை நகரம், குறுப்பு சந்தி, முஸ்லிம் கொளனி, மாணிக்கம்பிட்டி, 1ஆவது எல, 2ஆவது எல, 4ஆவது எல, 500 ஏக்கர், புதியநகரம், அளுத்வேவ, பி.எஸ். கொளனிய, கலககல ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.