"அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ளக் கிடைத்தமை விசேட அம்சமாகும்" UPDATE
UPDATED STORY
இருபதாவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான இன்றைய இப்தாரில் பங்கேற்றனர்.
முஸ்லிம் மக்களுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வருடாந்த இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் இன்று (05) புதன்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது.
இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக நடைபெறும் இப்தார் நிகழ்வு, இம்முறை கொவிட்-19 தொற்று காரணமாக ஒரு சிலரது பங்கேற்புடன் மாத்திரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் கட்சிகள் சிலவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத்தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.
ஸ்ரீலங்கா முஸ்லம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து நட்பு ரீதியாக கலந்துரையாடியதுடன், இப்தார் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார். அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ளக் கிடைத்தமை விசேட அம்சமாகும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹாபீஸ் நஸீர் அஹமட், எச்.எம்.எம்.ஹரீஸ், எஸ்.எம்.எம்.முஷரஃப், அலி சப்ரி ரஹீம், எம்.எஸ். தௌபீக், இஷாக் ரஹ்மான், பைஸல் காசிம் மற்றும் பிரதமரின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பர்சான் மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
Comments (0)
Facebook Comments (0)