156ஆவது பொலிஸ் தினம்
இலங்கையில் பொலிஸ் சேவையானது இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டது. இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபராக ஶ்ரீமத் ஜீ. டப்ள்யு. ஆர். கெம்பல், 1866ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி அரசியலமைப்பு ரீதியாக பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்ட திகதியையே ஆரம்பிக்கப்பட்ட திகதியாக கருதி 156 வது பொலிஸ் தினமாக இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றது.
வரலாற்று ரீதியான பிரதிபலிப்பும் நிறுவன வளர்ச்சியை அடிப்படையாக கொண்டதாகும். சிறந்த நன்மதிப்பு மற்றும் பொது மக்களின் வளர்ச்சிக்காக உறுதுணையாக நிற்கும் பொலிஸ் சேவையானது பொலிஸ் வரலாற்று தகவல்களை கட்டியெழுப்புவதில் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது.
செயல் ரீதியாக செயல்படும் இச்சேவையானது வரலாற்று ரீதியாக ஆராயப்பட வேண்டும் என்பதுடன், வெறும் வரலாற்றுப் பதிவை மாத்திரம் செயல்படுத்துவதற்காக மாத்திரமல்லாது நீண்ட காலமாக நடைமுறையிலுள்ள வெற்றியை அடையாளம் காண்பதற்காகவும், குறைபாடுகளை அடையாளம் காண்பதற்காகவும், எதிர்காலத்தை அமைத்து கொள்வதற்காகவும், கடந்தகால ஆய்வுகளுக்கு உதவியாகும் இருக்கின்றது.
கடலோரப்பகுதிகளை ஒல்லாந்தர்கள் ஆக்கரமித்தபோது 1650ஆம் ஆண்டு ஜூனி மாதம் 10ஆம் திகதி கொழும்பு நகர சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி கொழும்பு நகரில் வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக, இரவு நேரங்களில் நகரத்தை பாதுகாப்பதற்காக நான்கு சிப்பாய்களை அமர்த்தியமை இலங்கை பொலிஸ் சேவையின் முதல் தோற்றத்திற்கான ஆதாரங்களில் ஒன்றாக பிரதிபலிக்கின்றது.
கொழும்பு நகரத்தில் பொலிஸ் சேவைக்காக ராணுவ சிப்பாய்களும், கோட்டை பிரதேசத்தில் ஒல்லாந்தர் சிப்பாய்களும், புறக்கோட்டை பிரதேசத்தில் மலாய் இனத்தவர்களின் பொலிஸ் கூலி சிப்பாய்களும் கடந்த காலத்தில் பொலிஸ் சேவையை ஈடுபட்டனர்.
1806 ஆம் ஆண்டளவில் ஆங்கில இனத்தவர்களால் கொழும்பு நகரத்தின் வெளியே பொலிஸ் சேவையை புரிவதற்காக கட்டளை சட்டத்தை நிறைவேற்றியுள்ளதுடன் 1833வது ஆண்டளவில் அரசின் கொடுப்பனவுடன் பொலிஸ் சேவையை ஆரம்பித்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் கொழும்புக்கு பொலிஸ் அதிகாரியாக தோமஸ் நியமிக்கப்பட்டார். அப்போது கொழும்பு நகரில் உள்ள 39,000 மக்களுக்கு பொலிஸ் சேவையை புரிவதற்காக 165 பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்றை கடமையில் ஈடுபடுத்தினார்கள்.
1843ஆம் ஆண்டில், அக்காலத்தில் அமுலில் இருந்த பொலிஸ் கட்டளைச் சட்டத்தை ரத்து செய்து நாடு முழுவதும் சகல நகரங்களுக்கும் பொலிஸ் நிலையங்களை நிறுவுவதற்காக ஆளுனர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
1843ஆம் ஆண்டு பொலிஸ் பரிசோதகர் தரத்தை அறிமுகப்படுத்தி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததுடன், பொலிஸ் உதவியாளர் (பியோன்) பதவியை ரத்து செய்து பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியை அறிமுகப்படுத்தினர்.
1863ஆம் ஆண்டின் இறுதியில் 48 பொலிஸ் நிலையங்களை நிறுவப்பட்டதுடன், 1867ஆம் ஆண்டின் போது மருதானையில் முஸ்லீம் பள்ளிக்கு அருகாமையில் பொலிஸ் தலைமையகத்தை ஸ்தாபிக்கப்பட்டது.
சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பதாக இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபராக சேர் ரிட்சட் அலுவிகாரை அவர்கள் 1947 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் இந் நாட்டின் 11 வது பொலிஸ் மா அதிபராவார்.
1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்த பின்னர் இந் நாட்டில் ஏற்பட்ட சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களினால் எளிமையான முறையில் இப் பொலிஸ் திணைக்களத்தை மாற்றியமைத்ததுடன் நாடு பூராகவும் பொலிஸ் நிலையங்களை அதிகரித்து அதன் கடமைகளை வெவ்வேறு முறையாக ஆரம்பித்தனர்.
பொலிஸ் நிலையங்களை ஆரம்பிக்கப்படும் போது பின்பற்றிய கொள்கைகளுக்கிடையில் ஒரு கொள்கையாக ஏதேனும் நகரத்தில் அறவிடப்படும் வரிபணத்தில் அப் பொலிஸ் நிலையத்தை நடாத்தி செல்ல வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்பதாகும்.
பொறுப்புள்ள அரசாங்கத்தினால் பொது மக்களின் சகல பொறுப்புகளையும் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட பிரதான நிறுவனங்களுக்கிடையில் பொலிஸ் துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. அதனால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் ஏற்படும் தடைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் மக்கள் பொலிசாரிடமிருந்து விலகிச் செல்வது வழக்கமான சம்பவமாகும். ஆனாலும் பொலிஸ் சேவையின் போது மக்களின் தொடர்புகள் மிகவும் முக்கியமானதாகும்.
அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகல போராட்டங்கள், கலவரங்களுக்கு நேரடியாக முகம் கொடுப்பது பொலிசாராகும். 1971 ஆம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சிகளில் அரச விரோத கிளர்ச்சியாளர்களினால் பொலிசாருக்கே முதலாவதாக தாக்குதல் நடாத்தப்பட்டது. இராணுவ பண்புகள் இல்லாமல் உருவாக்கப்பட்ட பொலிசார் துப்பாக்கியேந்தியவாறு கடமைகள் மேற்கொள்ள வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டமைக்கு இவ்வாறான காரணங்களாகும். எல்.ரீ.ரீ.ஈ யுத்தகாலத்தில் அது தீவிரமாக இருந்தது. தற்போதைய காலத்தில் ஏற்பட்ட போராட்டத்தினால் மீண்டும் ஒருமுறை இவ்வாறான சந்தர்ப்பத்தை காணமுடிந்தது.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இடமாற்றம், பதவி உயர்வு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் திருத்தங்கள் ஒவ்வொறு அரசாங்கங்களிலும் மாற்றங்கள் ஏற்படும். அதற்கான நீண்டகால திட்டங்கள் இல்லை. பொலிசானது அரசியல் மயமாக்கப்பட்டது என முத்திரை குத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
புதிய பொலிஸ் நிலையங்கள் ஆரம்பித்தல்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் பொலிஸ் நிலையங்கள் புதிதாக திறப்பதற்காக இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டின் போது இலங்கைகயில் 438 பொலிஸ் நிலையங்கள் செயலில் உள்ளதுடன் அப்போது கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர்களின் எண்ணிக்கை 86830 ஆக இருந்தது. 2016 ஆம் ஆண்டு அரச கொள்கைக்கு ஏற்ப 600 பொலிஸ் நிலையங்களாக உயர்த்துவதற்கும், சமூக பொலிஸ் சேவையை ஆரம்பிப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 494 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு “சுபீட்சத்தின் நோக்கு” என்ற கொள்கையின் படி புதிதாக மேலும் 201 பொலிஸ் நிலையங்களை அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி 695 பொலிஸ் நிலையங்கள் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் எண்ணிக்கையில் தற்போது வரை 111 புதிய பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வரைக்கும் நாடு பூராகவும் 605 பொலிஸ் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. 156 வது பொலிஸ் தினத்தை கொண்டாடும் இச் சந்தர்ப்பம் வரைக்கும் இலங்கை பொலிசின் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 86698 ஆகும். இது தவிர பொலிஸ் விஷேட அதிரடிப் படையில் 8326 உத்தியோகத்தர்களும் உதவிச் சேவை உத்தியோகத்தர்கள் (வேலைப் பிரிவு) 1307 பேரும் பொலிஸ் பாதுகாப்பு உதவி உத்தியோகத்தர்கள் (எஸ்.ஏ) 232 பேருடன் முழு பொலிஸ் சேவையிலும் 96563 உத்தியோகத்தர்கள் கடமை புரிகின்றார்கள். பொலிஸ் சேவையில் அங்கிகரிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தவிர்த்து 102097 ஆகும். ஆனால் இவ் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு முழுமையாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்ததுடன் நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. பல பொலிஸ் நிலையங்கள் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டவை ஆகும். முன்னைய பொலிஸ் நிலையங்களில் கடமை புரிந்த உத்தியோகத்தர்கள் மற்றும் உற்கட்டமைப்புகள் பிரிந்து செல்வதால், பொலிஸ் நிலையங்கள் அதிகரிக்கும் திட்டத்தில் எதிர்பார்த்த உற்பத்திதிறன் இதுவரை சிறிதளவே கிடைக்கப்பெற்றுள்ளது.
பொலிஸ் துறையை மறுசீரமைத்தல்
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன அவர்களால் பொலிஸ் துறையை மறுசீரமைத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தி அவற்றை தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொலிஸ் நிருவாகத்தில் புதிய கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டமைப்பின்படி 45 பிரதேச பொலிஸ் பிரிவுகள் மற்றும் 77 செயல்பாட்டு பொலிஸ் பிரிவுகளின் கடமைகளுக்காக தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 107000 ஆக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு பிரிவுகள் மற்றும் கடமைகளும் பொலிஸ் நிருவாகத்திற்காக ஒதுக்கப்பட்ட திசையில் புதிய தோற்றத்தை எடுத்துள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இத் திட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 05 பிரிவுகளாக பிரித்து சேவையை விரிவுப்படுத்தியுள்ளது. அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பணிப்பாளர்கள் ஐவரின் கீழ் விசாரணை கோப்புகள் மற்றும் விசாரணை செய்யப்படும் முறைப்பாடுகளின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தி புதிய பிரிவுகளின் மூலம் விசாரணை செய்யப்படும். அவ்வாறு புதிதாக உருவாக்கப்பட்ட பிரிவுகளின் பெயர்கள்.
01. சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்ற விசாரணை பிரிவு
02. கனிணி குற்றவியல் விசாரணை பிரிவு
03. நிதி மற்றும் வணிக குற்றப் பிரிவு
04. மனித கடத்தல், கடலாசார் குற்ற விசாரணை பிரிவு
05. மனித படுகொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணை பிரிவு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மனித வள முகாமைத்துவ பிரிவு.
சகல பொலிஸ் உத்தியோகத்தர்களின் தனிபட்ட விவர கோப்புகளை பராமரிப்பதின் கடமைகள் மிகவும் கடினமாக நடாத்தி செல்வதுடன் உத்தியோகத்தர்களை பணியமர்த்தி கோப்புகளில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தகவல்களை கணினியில் பதிவிடுவதற்கு தேவையான சகல வசதிகளுடன் மனித வள முகாமைத்துவ தகவல் அமைப்பு (PMIS) நிறுவப்பட்டுள்ளது. PMIS எனும் திட்டத்தின் கீழ் உத்தியோகத்தர்களின் சகல தகவல்களையும் கனிணி பதிவேடு செய்யப்பட்டு சிறந்த, திறமையான, தகவல்கள் வழங்கப்படும் ஒரு சேவையாக பொலிஸ் நிருவாக செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக மனித வள முகாமைத்துவ பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட சகல உத்தியோகத்தர்களின், பொலிஸ் பரிசோதகர் தரத்திலான உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிகள் வரையிலான சகல உத்தியோகத்தர்களின் தகவல்கள் PMIS அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மாகாண மட்டத்தில் மனித வள முகாமைத்துவ பிரிவின் பிரிவுகள் அமைக்கப்பட்டு PMIS அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆட் சேர்ப்பு செய்தல் மற்றும் பதவி உயர்வுக்கான செயல்முறையை உரியமுறையில் நடைமுறைப்படுத்தி (SOR) அதன் மூலம் பதவி உயர்வுகளை வழங்குவதற்காக திட்டமிடுவதற்கும், கடந்த 02 வருட காலத்தில் இடமாற்றம் முறைகள் ஒழுக்காற்று காரணமாக மற்றும் விஷேட சந்தர்ப்பங்கள் தவிர்ந்த வருட இறுதி இடமாற்றங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
பெண் உத்தியோகத்தர்களை சமமாக மதித்தல்.
ஆண் பெண் சமூகத்தவர்களை சமமாக பேணுவதன் ஊடாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி பதவிகள், பிரிவுக்கு பொறுப்பான மற்றும் பிராந்தியங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களாக ஆக்குவதற்கான சந்தர்ப்பங்களை வழங்கியது போன்று வரலாற்றில் முதலாவது தடவையாக பெண் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நால்வர் நியமித்துள்ளதுடன், அவர்கள் பொலிஸ் மா அதிபர் வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்போது இலங்கை பொலிசில் 04 பெண் பிரதி பொலிஸ் மா அதிபர்களும், 04 பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும், 13 பெண் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும், 1149 பரிசோதகர்கள் தரத்திலான பெண் உத்தியோகத்தர்களும், 9464 பெண் பொலிஸ் சாஜன்ட் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தரத்திலான உத்தியோகத்தர்கள் அடங்கிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடு பூராகவும் சகல பிரதேசத்திலும் ஆண் உத்தியோகத்தர்களுக்கு நிகராக வியக்கதக்கும் வகையில் பொலிஸ் கடமைகளை முன்னெடுக்கின்றார்கள். பெண் உத்தியோகத்தர்களுக்கு சிறந்த மனநிலைமையில் கடமையாற்றுவதற்காக தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேலதிக வசதிகளை செய்து தரப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் உள்ளடக்கியவாறு தற்போது நடைமுறையில் உள்ள 605 பொலிஸ் நிலையங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் நிறுவப்பட்டுள்ளதுடன் 45 பிரிவுகளுக்கு பொறுப்பான குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் நிறுவப்பட்டுள்ளது. விசாரணை பிராந்தியம் மற்றும் தடுப்புப் பிராந்தியங்களாக இப் பணியகம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை விரைவாக நடைமுறைப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு.
நீண்ட காலமாக பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் கிடைக்காதமைக்கு தீர்வாக பதவி உயர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்காக 2019 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி , 2019 ஜூலை மாதம் 01 ஆம் திகதி, 2020 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதிகளில் பல்வேறு பதவிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பொலிஸ் சேவையில் 31541 உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 927 உதவிச் சேவையினர்களுக்கும் 490 விஷேட அதிரடிப்படையினர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்காக 13 பெண் பொலிஸ் பரிசோதகர்களுக்கும், பெண் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்காக பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர்கள் பதவியிலிருந்து 225 பேருக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒரே சந்தர்ப்பத்தில் பெரும்பாலானோர்களுக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு வழங்கிய சந்தர்ப்பம் இதுவே ஆகும்.
பொதுச் சேவையை வழங்குதல்.
பொலிசாரிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் உத்தியோகத்தர்கள் அல்லது பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மேலதிகமாக பிராதான கடமையாக குற்றம், போதை பொருள், வீதி விபத்து மற்றும் மோசமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்து தினசரி நடவடிக்கைகளை வழக்கம் போல் நடாத்தி செல்வதற்கு முடியுமான சூழலை உருவாக்குதல் வேண்டும். அதனால் பொலிஸ் கடமைகளை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளில் திறமைகள் அடிப்படையில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
சமீபத்திய வரலாற்றில் ஆரம்பிக்கப்பட்ட குற்றம் இடம்பெற்ற இடத்தின் ஆய்வுகூடம் (soco), மற்றும் 119 பொலிஸ் உடனடி அழைப்புச் சேவை, சலுகைச் சேவை, சரியான நேரத்தில் பொலிஸ் சேவையில் மிகவும் முக்கியமான சேவையாக திகழ்கின்றது.
வெளிநாட்டு வேளைவாய்ப்புக்காக செல்பவர்களுக்கு தேவையான தடையகற்றல் சான்றிதல் அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கு குறிப்பிட்ட அலுவலக வசதிகள் இல்லாத காரணத்தினால் காரியாலயங்களில் பொலிசாருடன் நன் நடத்தையுடன் கடமைகளுக்காக வருகைதரும் மக்களுக்கு விரைவாக மற்றும் நட்பாக கடமைகளை செய்வதற்கு சிறமமாக உள்ளது. இந்நிலையிலிருந்து முற்றிலும் விடுபட்டு சிறந்த செயல்திறனுடன் சேவையை வழங்குவதற்காக இணைய வசதிகள் மூலமாகவும் நடவடிக்கைகளை மேற் கொள்வதன் வாயிலாக மக்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுகின்றது. ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களுடன் நேரடியாக இணைய தொடர்புகளை மேற்கொள்ளல். கை விரல் அடையாளங்களை கனிணி உதவியுடன் ஒப்பீடு செய்தல் ஆகியசேவைகள் மிகவும் செயல்திறன் கொண்ட காரணியாகும். காணமல் ஆக்கப்பட்ட ஆவணங்களுக்கான பிரதிகள் வழங்கும் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்திலேயே வழங்குவதற்காக தனியான பொலிஸ் படிவமாக ஆவணத்தை அறிமுகப்படுத்தி மக்களுக்கு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிநுட்பத்தை பாவிப்பதனூடாக திறன்களை மேம்படுத்துதல்.
குற்றவாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் சகல குற்றங்களையும் விசாரணை செய்வதற்காக CCTV அமைப்பு மற்றும் CCTV உடன் நடமாடும் சேவையினை பயன்படுத்தி குற்றப் பதிவுகள் பிரிவில் வீடியோ காட்சிகளை பதிவு செய்தல் போன்று ஊடக பிரிவில் 24 மணித்தியாங்களும் தொலைக்காட்சி அலைவரிசை, இணையதளம், சமூக ஊடகங்களை உள்ளடக்கி ஊடகம் மற்றும் அச்சு ஊடக கண்கானிப்பு நிலையத்தை நடாத்தி செல்வது மிக முக்கியமாகும்.
VPN தொழிநுட்பத்தின் மூலம் (AMIS) சந்தேகநபர்களை ஒழுங்குமுறை தரவு அமைப்பு மற்றும் (AFIS) கைரேகை அடையாளத்தை அறிமுகப்படுத்தும் தரவு அமைப்புகளை பாவிப்பதன் ஊடாக மேலும் மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை அறிந்துகொள்வதற்காக D.N.A தொழிநுட்பம், குற்ற பிரதேசங்களில் கிடைக்கப்பெறுகின்ற கைவிரல் அடையாளம், பாத அடையாளங்கள் அவ்விடத்திலிருந்தே ஆய்வு கூடத்துடன் தொடர்பு கொண்டு பரிசோதனைகளை ஆரம்பித்தல் குற்ற விசாரணைகளை விரைவில் முடிப்பதற்கு காரணியாக அமையும் இவ்விடயங்களை மேலும் விருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குற்றங்கள் பதிவாதல் மற்றும் தீர்த்தல்.
2018 ஆம் ஆண்டில் 36354 பேரில் குற்றங்கள் பதிவாகியதுடன் அவற்றில் 28246 பேரின் குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வருடத்தில் 78 வீதமான குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டில் 34578 பெருங் குற்றங்கள் பதிவாகியதுடன் அவற்றில் 25611 குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வருடத்தில் 74 வீதமான குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் 31098 பெருங் குற்றங்கள் பதிவாகியதுடன் அவற்றில் 24412 குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வருடத்தில் 79 வீதமான குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 35412 பெருங் குற்றங்கள் பதிவாகியதுடன் அவற்றில் 28122 குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வருடத்தில் 79 வீதமான குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. பொலிஸ் கடமைகளில் இது தீர்த்துவைக்கப்பட்ட அதிகளவிலான குற்றமாக கருதப்படுகின்றது. கடந்த 04 வருடங்களில் குற்றங்கள் பதிவாவது அதிகரிப்பது மதிப்பிடும் போது குறைவாகவே காணப்படுகின்றது. குற்றங்கள் மிக வேகமாக அதிகரிக்க வில்லை ஆகையால் குற்றங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விளங்குகின்றது. குற்றங்களை தீர்ப்பதற்காக வளர்ச்சியடைந்த தொழிநுட்ப விதிமுறைகளின் ஒத்துழைப்போடு விசாரணை செய்தல், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதறாக தியாகத்துடன் செயற்படுதல் , குற்றத் தடுப்பு மற்றும் கடந்த 03 வருடங்களில் கொவிட் 19 காரணமாக மக்கள் அதிகமான காலம் பிரயாணங்களை தவிர்த்து தமது வீடுகளில் இருந்த காரணத்தினால் குற்றங்கள் பதிவாவது குறைவடைந்துள்ளது. பொலிஸ் கடமைகளில் இது மிகப் பெரிய விடயமாகும்.
வாகன கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு
வாகன கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பை மேற் கொள்ளும் பொலிசார் கடமையின் போது மக்களின் எதிர்ப்புக்கு உள்ளகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களினால் ஏற்படுகின்ற வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் தேவை ஏற்படுகின்றது. அதற்காக பாதசாரதிகள் மற்றும் வாகனங்களினை பயன்படுத்தும் சாதாரண வீதிகள், அதி வேக வீதிகள் பயன்படுத்துவதனை முகாமைத்துவப் படுத்த பொலிசார் இரவு பகல் , வெயில் மழை, தூசு, வாகன புகை போன்றவற்றில் கருத்திற்கொள்ளாமல் மிகவும் கடினமான கடமைகளை மேற்கொள்கின்றனர்.
வாகன தவறுகள் மற்றும் வாகன விபத்தினை கட்டுப்படமுத்துவதற்கு மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் குற்றம் இழைக்கப்பட்டவர்களுக்காக தடைவிதித்தல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் அரசுக்கு பெருந் தொகையான நிதிகள் அறவிடப்பட்டு வழங்கப்படுகின்றது. கடந்த சில வருடங்களில் வீதி விபத்துகள் ஏற்பட்ட எண்ணிக்கையின் அறிக்கை ஒப்பிட்டு பார்க்க முடியும்.
வருடம் வீதி விபத்து பாரதூரமான விபத்து சேதங்கள் எண்ணிக்கை மரணித்தவர்களின் எண்ணிக்கை வாகனங்களின் எண்ணிக்கை
2018 2994 8795 11918 35845 3151 7727921
2019 2645 7718 9391 30433 2839 8095224
2020 2040 6619 5841 23415 2144 8797852
2021 2414 6401 5434 22319 244
மேழே குறிப்பிடப்பட்ட அட்டவணையின் மூலம் கிட்டத்தட்ட வருடத்திற்கு வீதி விபத்து 2500 மற்றும் 3000 இடையில் அளவில் ஏற்படுகின்றன. அதனால் ஒரு நாளைக்கு வீதி விபத்துகளில் மரணித்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 06 தொடக்கம் 08 வரையிலாகும். அதே போல் கிட்டத்தட்ட 1000 வாகனங்களின் விபத்து 03 அல்லது 04 விபத்தின் நிகழ்தகவும் காணப்படுகின்றது.
போதை பொருள் குற்றங்கள்
பெருங் குற்றமாக கணிக்கப்படும் போதை பொருள் குற்றங்கள் அபாயகரமான மருந்துகள் மற்றும் போதையூட்டும் மருந்துகள் என்று கூறலாம் பொலிசார் போதை பொருள் சுற்றிவளைப்பாக கருதுவது பதிவாகிய சந்தர்ப்பத்திலிருந்த வருடாந்தம் கைது செய்யப்படும் போதை பொருள் மற்றும் வழக்கு தொடரும் விகிதத்தினை கருத்தில் கொள்ளும் போது போதை பொருள் பாவனை செய்யும் மக்களை விட போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதே அதிகளவில் பதிவாகியுள்ளது. அதற்கு காரணம் இன்னும் நமது நாட்டில் ஹெரோயின், மொப்பின், ஐஸ் போன்ற போதை பொருட்களை பாவித்து போதையிலிருக்கும் நபர்களை கைது செய்வதற்கு நிரந்தர தீர்வு மற்றும் சட்டமின்மையாகும்.
தொடர் இலக்கம் போதை பொருள் வகை 2018 2019 2020
கைது செய்யப்பட்ட அளவு கிலோ கிராம் வழக்கு தொடரப்படும் அளவு கைது செய்யப்பட்ட அளவு கிலோ கிராம் வழக்கு தொடரப்படும் அளவு கைது செய்யப்பட்ட அளவு கிலோ கிராம் வழக்கு தொடரப்படும் அளவு
01. கஞ்சா 8888.4 69886 15389 62024 6791 54484
02. அபின் 0.8 01 9.589 141 0.975 133
03. அயிஸ் 82.291 189 10.164 597 0.193 51
04. ஹெரோயின் 72.363 44346 2101.691 52553 574.445 51
05. மோபின் 0.194 187 0.1 18 0.1 5
06. கொகேன் 9.859 62 24.725 122 1.250 46
வருடமொன்றுக்கு பொலிசாரால் செய்யப்படும் கடமை மூலம் அரசுக்கு நிதி சேகரித்து வழங்கப்படுகின்றது.
போக்குவரத்து குற்றங்கள், கலால் வரி குற்றங்கள், போதை ஒழிப்பு சுற்றிவளைப்புகள். போதை பொருள் தொடர்பான குற்றங்கள், சுங்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் சுற்றிவளைப்புகள், விபத்துகள், இசைவுச் சான்றிதல் அனுமதி பத்திரங்கள் விநியோகித்தல், பிரதிகளுக்கான நிதி பெற்றுக் கொள்ளல், ஒலி பெருக்கிகளுக்கான அனுமதி வழங்குதல், என்பவற்றின் மூலம் நிதி விதிமுறைகளின் படி அரசுக்கு ஒவ்வொரு வருடமும் அதிக அளவிலான வருமானம் பெற்று கொடுக்கப்படுகின்றது.
இலங்கை பொலிசார் சில சந்தர்ப்பங்களில். மக்களால் எதிர்பார்க்கப்படும். ஆயிரம் சேவைகளில். ஓரிரு சேவையை நிறைவேற்ற முடியாமல் போகும். சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடுகின்றது.
தற்போது காணப்படும் சமுதாய பொருளாதார, சூழலில் அமைதியை பாதுகாப்பது, குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது கட்டுப்படுத்துவது, போன்ற கடமைகளுடன் காலத்துக்கு காலம் ஏற்படும் மாற்றங்களுடன் கூடிய பொறுப்பு அளிக்கப்படும் பல்வேறு சவால் மிகுந்த கடமைகள் அதில் முக்கியமாக காணப்படுகிறது.
அவ்வாறான சவால்கள் தொடர்பான தெளிவுடன் 156 வது பொலிஸ் தினத்தில் நமது பொலிஸ் வரலாற்றை தெரிந்து கொள்வதுடன், தற்கால பொலிஸ் சேவையின் பண்புகளையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஈஸ்டர் தாக்குதலினால் அதிகரித்த கடமைகள் மறைந்து போவதற்கு முன்பு அனைத்து கடமைகளும் Covid-19. நோய் தாக்கம் காரணமாக தனித்துவமான மாற்றத்துக்கு உள்ளாகியது.
சேவை மற்றும் சுகாதார சேவை வீட்டிலிருந்து நிறைவேற்ற முடியாது. அவர்களின் சேவைகள சேவையைப் பெற்றுக் கொள்பவர் அருகிலிருந்த நித்திரை கொள்ளாமல் விடுமுறை பெறாமல் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
பொது மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்ற பொருளாதார சமுதாய சிக்கல்கள், அதிகரிக்கும் ஆபத்து காணப்படுகிறது. வாழும் போராட்டத்திற்காக செய்யப்படும் ஒழுங்கற்ற முயற்சிகளில் நடைபெறுகின்ற திருட்டு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு இரக்க தன்மையாக தீர்மானிப்பதற்கு சட்டத்தில் ஓட்டைகள் எதுவுமில்லை அதை செயல்படுத்தும் பொலிஸ் உத்தியோகத்தர் நேரடி தீர்மானம் எடுக்க வேண்டி ஏற்படுகிறது.
150 வருடங்களுக்கு மேற்பட்ட காலங்களை கடந்துள்ள பொலிசாருக்கு இன்னமும் நிரந்தர பொலிஸ் தலைமையகம் அத்திடிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. அனேக போலீஸ் பிரிவுகள் மற்றும் பொலிஸ் நிலையங்கள். வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
இன்றுவரை கடமையில் இருந்த போது மரணித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 3039 ஆகும். அதில் 2598 பேர் LTTE பயங்கரவாத செயல்பாட்டின் காரணமாக மரணித்தவர்கள் என்பதுடன். அங்கவீனமுற்றோரின் எண்ணிக்கை 1571 ஆகும். சாதாரண போலீஸ் கடமையின் போது மற்றவர்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக உயிர் தியாகம் செய்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 441 ஆகும். வருடம் ஒன்றிற்கு 78 உத்தியோகத்தர்களுக்கு மேற்பட்டவர்கள் வைத்திய காரணங்களுக்காக ஓய்வு பெறுவதுடன் சிலர் சேவையிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களால் செய்யப்படும் சேவை. எல்லைக்குட்பட்ட தாகும்.
பொலிஸ் கடமையில் இருக்கும்வரை அவர்களை நினைவு கூர்வதற்காக மார்ச் 21 ஆம் திகதி பொலிஸ் வீரர்கள் தினமாக பெயரிடப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் பொலிஸ் சேவையாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, உள்விவகாரங்கள் அமைச்சு, போன்ற அமைச்சுக்களின் கீழும் பொலிஸ் ஆணைக்குழுவின் கீழும் நிர்வகிக்கப்பட்டு தற்போதைய அரசின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கௌரவ அமைச்சரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் படி இம்முறை பொலிஸ் தின கொண்டாட்ட நிகழ்வுகள் கௌரவமாக கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் விஞ்ஞான கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது இன்றைய பொலிசாரினால் ஏற்பாடு செய்துள்ளதின் படி 2050 வது ஆண்டின் போது ஏற்படும் அபிவிருத்திகளை தழுவி கொண்டு சந்தோசபடாமல் அன்றையதினம் ஏற்படும் தொழிநுட்ப குற்றத்தை தடுப்பதற்கு சட்டமூலங்களை தயாரிப்பதற்கு மற்றும் அதற்கு ஏற்ற பொலிஸ் பயிற்சி தொடர்பாக நிரந்தரமான அபிவிருத்தி பாதையில் பயணிப்பதற்கு உலகம் தயாராகி கொண்டு இருக்கின்றது. நிரந்தர அபிவிருத்தி என்பது மக்களின் அபிவிருத்தி என்றாலும் அதற்கு தேவையான குற்ற சூழல் உருவாவதை தடுப்பதற்கு முடியாதிருப்பது பிரச்சனையாகும். மக்கள் தொடர்பு நிலையாக இருந்தாலும் சிவில் சமூகத்திற்கு மேல் மற்றும் தொலைவில் இல்லாமல் அதற்கு சமமாக செயற்பட்டாலும், சுயாதீன பொலிஸ் சேவையினை உருவாக்குவது கடினமான விடயமாகும்.
ஆனாலும் உயர் பயிற்சி மற்றும் தொழிநுட்பத்தை பாவிப்பதன் ஊடாக நிகழ்காலத்திலுள்ள சமூகத்திற்கு வழங்குவதற்கும், பொலிஸ் உத்தியோகத்தர் பணத்திற்கு அடிமையாகத பொருளாதார அபிவிருத்தியடைந்த நம்பகத்தன்மையுடைய நபராக மாற்றுவதனால் இயன்றளவு வெற்றிபெறமுடியும் மக்களுக்கு நெருங்கிய தொடர்பினை பேணுவதற்கு தடையாக உள்ள விடயங்களை அகற்றி சட்டத்தினை மதிக்கும் மக்களை உருவாக்குவதற்கு பொறுப்புவாய்ந்த மக்களாக மாறுவதற்கு ஊக்குவிப்பது கடமையாகும்.
நாம் பொலிசாரை அடையாளம் காண்பது குற்றத்துடன் தொடர்புப் பட்ட நிறுவனம் ஒன்று என்ற வகையிலாகும். நீதிமன்றம், சிறைச்சாலை, நன்நடத்தை ஆகிய இதன் நிறுவனமாகும். சமூகத்தினால் பிழைகள் செய்பவர்கள் பொலிசாரின் தேவையின் போது பொது மக்களால் உணரமுடியும். அணைத்து சட்டங்களுக்கும் மதிப்பளித்து நற்செயல்களில் ஈடுபடுகின்ற மக்களை கொண்ட பொலிஸ் பிரிவு ஒன்று இருப்பின் அப்பிரதேசத்திலிருந்து பொலிசாரை அகற்றி வேறுபிரதேசத்திற்கு அல்லது அபிவிருத்தியினை அடைந்து கொள்வதற்காக செயற்படும் ஒரு படையாக நியமிக்க முடியும். அவ்வாறு செயற்படுவது பொலிஸ் பொதுமக்கள் என்ற வேறுபாடு உள்ள சமூகத்தில் அன்றி நாம் அனைவரும் ஒருவர் என நினைக்கும் அல்லது ஒருவருக்கு ஒருவர் மரியாதை செய்யும் சுதந்திரமான நாள் ஒன்றிலாகும். எப்போதும் அனைவரினதும் நல்லென்னத்திற்காக செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் எதிர்பார்ப்பானது, இந்நாளானது மக்களிலிருந்து பொலிசாரைப்பற்றிய நல்ல எண்ணக் கூற்றுக்கள் மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைக்கும் தினமானகும்.
பொலிஸ் ஊடகப் பிரிவு.
Comments (0)
Facebook Comments (0)