பதிவுசெய்யப்படாத மத்ரஸாக்கள் தடை செய்யப்படும்: சரத் வீரசேகர
கல்வி அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்படாத மத்ரஸாக்கள் மற்றும் முஸ்லிம் சமய பாடசாலைகள் ஆகியன தடை செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அடிப்படைவாத கொள்கைகள் பரப்பப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்று பௌத்த சமய கல்வி நிலையங்களான பிரிவினாக்களும் பதிவுசெய்யப்பட வேண்டும் என அவர் கூறினார்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அடிப்படைவாத செயற்பாடுகளுளை நிறுத்த வேண்டிய எனது பொறுப்பாகும் என அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள நிலையிலேயே சுமார் 200 மத்ரஸாக்கள் தடை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் மத்ரஸாக்கள் மற்றும் முஸ்லிம் சமய பாடசாலைகள் ஆகியவற்றினை பதிவுசெய்யும் நடவடிக்கையினை கல்வி அமைச்சினால் இதுவரை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவில்லை.
நன்றி - சன்டே டைம்ஸ்
Comments (0)
Facebook Comments (0)