தொற்றா நோய்களுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை புதுப்பித்து மேம்படுத்தவும்
கொவிட்-19 தொற்றுக்கு தீர்வுகாணும் செயற்பாடுகளுக்கு மத்தியில், தொற்றாநோய்களை தடுக்க, கண்டறிய, கட்டுப்படுத்த மற்றும் சிகிச்சையளிப்பதற்கான சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும்.
உலகளாவிய ரீதியில் தொற்றாநோய்கள் வருடாந்தம் 41 மில்லியன் மக்களை காவுகொள்வதோடு, அவற்றில் மூன்றில் ஒரு பகுதி முதிரா - தொற்றா நோய் மரணங்களாகும்.
இருதய நோய், புற்றுநோய், நாட்பட்ட சுவாச நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் ஆகியன நான்கு பாரிய தொற்றாநோய்கள் என்பதோடு, இவற்றில் 80 வீதமானவை முதிரா - தொற்றா நோய் மரணங்களாகும்.
உலக சுகாதார அமைப்பு இயங்கும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் உள்ளடங்களாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளிலேயே 85 வீதமான மரணங்கள் சம்பவிக்கின்றன.
புகையிலை பயன்பாடு, உடல் ரீதியான செயற்பாடுகள் அற்ற தன்மை, ஆபத்தான மதுபான பயன்பாடு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்ற முக்கிய தொற்றாநோய் காரணிகளாவன மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கின்றன.
கொவிட்-19 தொற்றுக்கு பதிலளிக்கும் தற்போதைய செயற்பாடுகளுக்கு மத்தியில், பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும், கண்டறிவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், அவசியம் காணப்படும் அனைவருக்கும் சிகிச்சையை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டிய காலம் அனைத்து நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
தொற்றா நோய்களுடன் வாழும் மக்கள், ஆபத்தான கொவிட் - 19, அதனுடன் தொடர்புடைய நோய்கள் மற்றும் மரணத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. பரந்தளவிலான தொற்றாநோய்களுடன் சார்ஸ் - கோவி - 2 நோய்த் தொற்றும் தொடர்புபடுகையில் அதன் தாக்கம் அதிகரிக்கின்றது.
அதுமட்டுன்றி, அவர்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பாதகமான விளைவை எதிர்கொள்கின்றனர். தற்போது காணப்படும் தொற்றுநோய்களின் அலைகளுக்கு மத்தியில், பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் உயர்ந்தளவில் பதிலளிக்க, தொடர்ந்து ஆதரவளிக்கும். அத்தோடு, சுகாதார சமத்துவம் மற்றும் தொற்றா நோய்கள் உட்பட அத்தியாவசிய சுகாதார சேவைகளை பராமரிக்கின்றது.
தொழிநுட்பத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட இடைவெளியை பேணி நோயாளிக்கு சிகிச்சை வழங்கும் டெலிமெடிசின் சேவை, மருந்துகளை பரிந்துரைப்பது நீடிக்கப்படுதல், வீடுகளுக்கே மருந்துகளை கொண்டுசென்று கொடுப்பது போன்ற உயர்ந்த தாக்கங்களைக் கொண்ட செயற்பாடுகள் தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட வேண்டும்.
தேசிய வரிசைப்படுத்தல் மற்றும் தடுப்பூசி திட்டங்களுக்கு ஏற்ப, ஆபத்தை எதிர்கொள்ளும் குழுக்களுக்கு தடுப்பூசியை வழங்க ஊக்குவிக்க வேண்டும். தொற்றாநோய்களுக்கு எதிராக பிராந்தியங்கள் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை நிறுத்தக்கூடாது.
முன்னுரிமையின் அடிப்படையில் தொற்றாநோய்களை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் 2014ஆம் ஆண்டு முதல், பிராந்தியமானது தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. தேசிய பல்நோக்கு அல்லாத தொற்றா நோய் செயற்திட்டங்களை அனைத்து நாடுகளும் செயற்படுத்துகின்றன.
கொவிட்-19 இற்கு பதிலளிக்கும் செயற்பாடுகளுக்கு மத்தியில் உலகளாவிய ரீதியில் 2025 மற்றும் 2030 ஆண்டுகளுக்குள் தொற்றா நோயற்ற தமது இலக்குகளை அடைந்துகொள்வதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். பெரும்பாலான நாடுகள் தேசிய மனநலசார் கொள்கைகளை உருவாக்கியுள்ளன.
அவை தொடர்ந்து வரும் மாதங்களிலும் வருடங்களிலும் பலப்படுத்தப்பட வேண்டும். பிராந்தியமானது அதன் வெற்றிகளை பாதுகாக்கவும் தற்காத்துக்கொள்ளவும் மற்றும் மேலும் பல இயைபியக்கத்தை ஊக்குவிக்கவும் பல முன்னுரிமை இலக்குகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
முதலாவதாக புதிய முயற்சிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்வது அவசியம். உதாரணமாக, உலக சுகாதார அமைப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகளாவிய நீரிழிவு ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்தியது.
நிதி நெருக்கடிக்கு அப்பால் அனைத்து மக்களும் தரமான நீரிழிவு நோயறிதல் கருவிகள், மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவ தயாரிப்புகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தரமான இன்சுலினை பெற்றுக்கொள்வதை அதிகரிப்பதில் பிராந்தியமானது அண்மைய ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எனினும், பாதிப்பை எதிர்கொள்ளும் சமூகங்கள் இதனை பெற்றுக்கொள்வதில் காணப்படும் தடைகள் தொடர்கின்றன.
இந்நிலையில், தொழிநுட்பம் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றில் புதிய முயற்சிகளை உருவாக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. இதன்மூலம் பிராந்தியத்தில் அனைத்து நாடுகளும் அதிகபட்ச பெறுபேற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, சரிவரும் என்று எங்களுக்குத் தெரிந்த சிறந்த கொள்வனவு (best buy) தலையீட்டு வேலைத்திட்டத்தை அமுல்படுத்தல். ஆரோக்கியமற்ற தயாரிப்புக்கள் மீதான வரியினை கொள்கை வகுப்பாளர்கள் அதிகரிப்பதன் மூலம், நுகர்வு வீதத்தினை குறைக்கக்கூடியதாக உள்ளதோடு, முழுமையான ஆரோக்கியத்தினை மேம்படுத்தி, தனியாள் மற்றும் பொது சுகாதார செலவுகளை குறைக்க முடியும் என ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த செயற்பாட்டினூடாக நிதி வருவாயானது அதிகரிக்கப்படும். அத்தொகையானது சுகாதார பிரிவிற்கு ஒதுக்கப்படுமானால் கொவிட்-19 இல் இருந்து சுகாதார மற்றும் பொருளாதார ரீதியாக நாம் மீன்டெழ அது உதவியாக இருக்கும். அதுவே சமமானதும், நெகிழ்வுத்தன்மை மிக்கதும் நிலையானதுமாகும்.
ஆரோக்கியமற்ற உற்பத்திகளின் சந்தைப்படுத்தலிற்கு கட்டுப்பாடுகளை விதித்தலும் இதேபோன்ற அவசியமான ஒரு விடயமே. இருப்பினும், இளைஞர்கள் மத்தியில் வகைகள் (brand) மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்தில் பதிலீட்டு விளம்பரங்களை கொண்டு சரி செய்ய வேண்டும்.
மூன்றாவதாக, குறிப்பாக முன்வரிசையில், தொற்றா நோய்களை நிவர்த்தி செய்யும் செயற்பாடுகளை சுகாதார முறைமைக்குள் வலுப்படுத்தல். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆலோசனை, ஆரம்ப நிலையிலேயே நோய் தொற்றினை அறிவதற்கான இலக்கு தரமான மருந்துகள் மற்றும் தொற்றா நோய் முகாமைத்துவத்திற்கு அவசியமான தரமான மருத்துவ சாதனங்கள் உள்ளடங்கலாக தரமான, ஒருங்கிணைந்த தொற்றா நோய் சேவையினை ஆரம்ப மட்டத்திலேயே பெற்றுக்கொள்வதற்கான அவசியம் தொடர்பாக பிராந்தியத்தின் 2016ஆம் ஆண்டு கொழும்பு பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இவ் ஒவ்வொரு பகுதிகளிலும் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளன. இது ஆரம்பநிலை சுகாதாரத்திற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய செயல்பாட்டு கட்டமைப்பாகும். இது கொவிட் -19 இற்கான எதிர் செயலாகவும், மீண்டு வருவதற்கும் மற்றும் அதற்கு மேற்பட்ட விடயங்களை துரிதப்படுத்தவும் உதவுகிறது.
மக்கள் மைய கொள்கைகளே தற்காலத்தின் தேவைப்பாடாகும். சமூக எல்லை மற்றும் ஈடுபாட்டினை தீவிரப்படுத்துவதன் மூலம், அனைத்து மக்களும் தொற்றா நோய்களுக்கான அடையாளம் மற்றும் அறிகுறிகளை புரிந்துகொள்வதுடன் அதனை எவ்வாறு பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது என்றும் இனங்கண்டு கொள்வர் என்பதை கொள்கை வகுப்பாளர்கள் உறுதி செய்துகொள்ள முடியும்.
முக்கியமாக சுகாதாரம் மற்றும் தொற்றா நோய் தொடர்பான கல்வியறிவினை அவர்கள் அதிகரிக்கச் செய்யலாம். வழமையான மற்றும் போதியளவான உடற் செயற்பாடுகள், ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள், புகையிலை மற்றும் ஆரோக்கியமற்ற உற்பத்திகளை தவிர்த்தல் போன்றன தொடர்பாகவும் ஊக்கமளிக்கலாம்.
முழு அரசாங்க மற்றும் முழுச்சமூக கொள்வனவினை அடைதல் அவசியமாகும். கொள்கை வகுப்பாளர்கள் துறைசார்பங்காளர்களின் ஈடுபாட்டினை தீவிரப்படுத்தல் அவசியமாகும்.
அத்தோடு தற்போது நிலவும் இடைவெளியினை சிறப்பாக அடையாளம் காணக்கூடிய தொற்றா நோய்களுடன் வாழும் மக்களின் நுண்ணறிவு மற்றும் அது தொடர்பான அவர்களின் கண்ணோட்டம் தொடர்பாகவும் ஆராய வேண்டும்.
பாதிக்கப்பட்டோரின் குரலை ஒலிக்கச் செய்யவும், அவர்கள் பங்காளர்களாக அழைக்கப்படுவதினை உறுதி செய்யவும், மக்கள் மைய கொள்கைகளை உருவாக்குவதினை தொடரவும் உலக சுகாதார ஸ்தாபனமானது உறுதி கொண்டுள்ளது.
தொற்றா நோய்களுக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்பாடுகளுக்காக காத்திருக்க முடியாது. இதற்கிடையில் கொவிட்-19 இற்கான எதிர் செயலாக, சிக்கலான மற்றும் சுகாதார ரீதியில் ஆதரவு தேவைப்படும், ஆரோக்கியத்திற்கும் நிலையான அபிவிருத்திக்கும் சவாலாக விளங்கக்கூடிய இந்த தொற்றா நோயால் பாதிக்கப்படுகின்ற பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார ஸ்தாபனமானது தொடர்ந்தும் ஆதரவு தெரிவிக்கும்.
இந்த தொற்றா நோய் ஆபத்தினை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குறைப்பதோடு அனைத்து மக்களுக்கும் தரமான பராமரிப்பு மற்றும் சமமான, விரிவான, அடையக்கூடிய சிகிச்சை முறை ஆகியவற்றை அணுகக்கூடியதாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பும் உள்வாங்கப்பட்டு ஒவ்வொரு கண்டுபிடிப்பும் பயன்படுத்தப்படல் வேண்டும். யாரையும் விட்டுவிடாமல் இருக்க வேண்டும்.
Comments (0)
Facebook Comments (0)