நோர்வே தூதுவராலயம் புதிய முகவரிக்கு இடமாற்றம்

நோர்வே தூதுவராலயம் புதிய முகவரிக்கு இடமாற்றம்

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் இதுவரை காலமும் இயங்கிய புல்லர்ஸ் ஒழுங்கை, கொழும்பு 7 எனும் முகவரியிலிருந்து, கொழும்பு 2 இல் அமைந்துள்ள அலுவலகத் தொகுதிக்கு இடமாறியுள்ளது.

இதன் பிரகாரம், தூதரகத்தின் அலுவலகம் 5ஆம் மாடி, M2M கட்டடம், இல. 34, டபிள்யு. ஏ. டி. ராமநாயக்க மாவத்தை, கொழும்பு 2 எனும் முகவரியில் இயங்கும்.

தற்போதைய கொவிட்-19 தொற்றுப் பரவலுடனான சூழ்நிலை காரணமாக, தூதரகத்தின் ஏதேனும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, முற்பதிவை மேற்கொள்வது அவசியமாகும்.

தூதரகத்தின் வழமையான தொலைபேசி இலக்கமான +94 115 608 700 அல்லது மின்னஞ்சல் முகவரிகளான emb.colombo@mfa.no அல்லது consular.colombo@mfa.no ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம்.