இலங்கைக்கு மேலும் பல உதவிகளை வழங்கத் தயாராக உள்ளோம்: பாகிஸ்தான்
அஷ்ரப் ஏ சமத்
கொவிட் - 19 தாக்கம் முடிவடைந்தவுடன் மேலும் பல உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தயாராக உள்ளோம் என பாகிஸ்தான் இன்று (13) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயா் ஸ்தானிகராலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் முஹமட் கத்தாக் இந்த அறிவிப்பினை மேற்கொண்டார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"இலங்கை - பாகிஸ்தான் நட்புறவு ஒரு நீண்டகால சரித்திரம் வாய்ந்ததொன்றாகும். பாகிஸ்தான் இலங்கைக்கு பல்வேறு துறைகளில் உதவி வருகின்றது. எதிர்காலத்தில் தொடாந்தும் உதவும். பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னா் இலங்கையுடன் பல ஒப்பந்தகள் கைச்சாத்திட்டோம்.
தற்போதைய அரசாங்கத்துடன் நல்ல நட்புறவுடனுடம் புரிந்துணா்வுடன் நாம் செயலாற்றி வருகின்றோம். இலங்கையின் பல துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்றுமதிஇ இறக்குமதி வர்த்தகம், கல்வி, விளையாட்டு, சுற்றுலாத்துறை, கடல் போக்குவரத்து விமானப் போக்குவரத்து துறைகளில் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.
இலங்கையின் சுற்றலாத்துறை பிரயாணிகள் பௌத்த காலாசார சரித்திரங்கள் பற்றிய அறிவதற்காக பாகிஸ்தானின் பல பிராந்தியங்களுக்குச் சென்று வர முடியும். அங்குள்ள இயற்கையான பசுமைகள், வளங்களை தரிசிக்க முடியும்.
அதே போன்று பாககிஸ்தான் முதலீட்டாளர்கள், வர்த்தகா்கள், சுற்றுலா பிரயாணிகள் இலங்கை வருவதற்கும் எமது உயா் ஸ்தானிகராலயம் அலுவலகம் பல கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
பாகிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவத்துறையில் இலங்கை மாணவா்கள் கற்க முடியும். இலங்கையில் மருத்துவா்களுக்கான பல வெற்றிடங்கள் உள்ளன.
இதனை விட பாகிஸ்தான் இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இலங்கை மாணவா்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் தலைவா் டாக்டா் அலி ஜின்னாவின் பெயரில் பல புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தினை ஒவ்வொறு வருடமும் செயல்படுத்தி வருகின்றோம்.
இலங்கையுடன் பல ஏற்றுமதி - இறக்குமதி சுதந்திர வா்த்தக உடன்படிக்கை செய்துள்ளோம். 100,000 மெஹா டொன் இலங்கை தேயிலையை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்துவந்தது. தற்கால வியாபார நடவடிக்கைகளில் இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளது. எதிா்காலத்தில இவை சீராக்கப்படும்.
அம்பாறை மாவட்டத்திற்கு நான் அண்மையில் விஜயம் மேற்கொண்டேன். அப்பிரதேசங்களில் கல்வி, வறுமை ஒழிப்பு சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு,விவசாயம், கலாசாரம் போன்ற துறைகளில் பாகிஸ்தான் உதவ உள்ளது" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)